Monday, September 19, 2011

எதிர்கால திட்டங்களை பகிர்ந்து கொள்ள உதவும் இணையம்


எதிர்கால திட்டங்களை பகிர்ந்து கொள்ள உதவும் இணையம்
[ சனிக்கிழமை, 17 செப்ரெம்பர் 2011, 10:44.25 மு.ப GMT ]
திட்டமிடல் என்பது எல்லோருக்கும் தங்கள் பணிகளை சிறப்பாகவும் செவ்வனே செய்து கொள்ள உதவியாக அமைகிறது.
நாம் சில கருமங்களை செய்ய எண்ணி பின்னாளில் அதை மறந்து தொலைத்து விடுவதுண்டு. அதற்காகவே திட்டமிட்ட செயல்பாடுகளை பதிந்து வைத்து கொண்டால் நல்லது.
உங்களின் எதிர்கால பணி திட்டங்களை பதிவு செய்து கொள்ளவும். நீங்கள் பதிவு செய்த பணிகளை சிறப்பாக உரிய நேரத்தில் செய்து கொள்ளவும் வசதியளிக்கிறது COOLENDAR.COM என்ற தளம்.
இந்த தளத்தின் மூலம் இன்றைய நாள், எதிர்வரும் நாள், வாரம், மாதம் என எதிர்கால திட்டங்களை இலகுவாகவும் விரைவாகவும் பதிவு செய்து கொள்ள முடியும்.
அத்துடன் நீங்கள் குறித்த நாளில் செய்ய வேண்டிய பணிகளை உங்களின் கூகுள் டாக்(GOOGLE TALK ) மூலம் இந்த தளம் உங்களுக்கு அறியத்தருகிறது.
இந்த தளத்தின் வசதியினை பெற உங்களின் கூகுள் கணக்கு மூலம் உள்நுழைந்து கொள்ள வேண்டும். இந்த தளத்தின் வசதிகள் ஆப்பிள் மற்றும் ANDROID செயலிகளாக உங்கள் ஆப்பிள் மற்றும் ANDROID சாதனங்களில் தரவிறக்கம் செய்ய முடியும்.

No comments:

Post a Comment