Friday, September 3, 2010

வெளிநாட்டில் இருப்பவருக்கு ஜீமெயில் மூலம் போன் கால் செய்யலாம்

வெளிநாட்டில் இருப்பவருடன் போனில் பேச வேண்டும் என்றால இனி அதிக பணம் செலவு செய்ய வேண்டாம் ஜீமெயில் மூலம் அமெரிக்கா மற்றும் கனடாவில் இருப்பவருக்கு இலவசமாகவும் மற்ற நாடுகளில் இருப்பவருக்கு குறைந்த செலவிலும் போன் செய்யலாம்.>

விரைவில் வெளிவரும் என்று ஆவலோடு எதிர்பார்த்திருந்த கூகுளின் சேவை இன்று முதல் நாம் அனைவரும் பயன்படுத்தலாம் அதாவது
ஜீமெயில் மூலம் இனி நாம் வெளிநாட்டில் இருப்பவருடன் குறைந்த செலவில் போனில் பேசலாம். இதற்கு நாம் செய்ய வேண்டியது நம் ஜீமெயில் கணக்கை திறந்து வைத்துக்கொண்டு சாட் என்பதில் நுழையவும் அடுத்து Call என்பதை சொடுக்கி நாம் எந்த நாட்டிற்கு வேண்டுமானாலும் போன் செய்யலாம்.

Call Phone என்பது இல்லாவிட்டால் சாட்- என்பதில் இருக்கும் தேடலில் call என்பதை கொடுத்ததும் வரும். Call என்பதை சொடுக்கி நாம் போன் பேசலாம்.

அமெரிக்கா மற்றும் கனடாவில் இருப்பவரிடம் இலவசமாக பேசலாம் மற்ற நாடுகளில் இருப்பவருடன் குறைவான கட்டணம் நிர்ணயத்துள்ளது.

வந்துவிட்டது கனவுலக விமானம் 'டிரீம்லைனர்'

பல ஆண்டுகளாக எதிர்பார்க்கப்பட்ட, போயிங் நிறுவனத்தின் “கனவுலக’ விமானமான “போயிங் 787 டிரீம்லைனர்’ விமானம் சமீபத்தில் வெள்ளோட்டம் விடப்பட்டது.
உலகின் அதிநவீன, சொகுசு விமானம் என்று அழைக்கப்படும் இந்த விமானம் அடுத்த சில நாட்களில் பயன்பாட்டிற்கு வர உள்ளது.

கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன் இந்த கனவுலக விமானத் திட்டம் குறித்து போயிங் நிறுவனம் அறிவித்தது. ஆனால், இந்த புதுமையான விமானம் திட்டமிட்டபடி வெளிவரவில்லை. அதிக விலையும், குறைவான ஆர்டருமே இதற்கு முக்கிய காரணமாக இருந்தது. மேலும், தொழிலாளர்கள் வேலை நிறுத்தம், மூலப் பொருட்கள் பற்றாக்குறை, அதிக எடை, இறக்கைகளை பொருத்துவதில் ஏற்பட்ட தொழில் நுட்ப சிக்கல் போன்றவைகளும் 'டிரீம்லைனர்’ விமானம் தாமதமானதற்கு காரணங்கள் ஆகும்.

இத்தனை தடைகளையும் தாண்டி, சமீபத்தில் இந்த விமானம் வெள்ளோட்டம் விடப்பட்டது. முதற்கட்டமாக, பத்திரிகையாளர்கள் இந்த வெள்ளோட்டத்தின் போது விமானத்தில் பயணித்தனர். “டிரீம்லைனர்’ விமானம் பல்வேறு சிறப்புகளை கொண்டது. உயரம் அதிகம் கொண்ட கேபின், அமர்ந்திருப்பதே தெரியாத அளவிற்கு மெத்தை போன்ற இருக்கைகள், கண்களைக் கவரும் பல வண்ண விளக்குகள், மிக குறைந்த எரிபொருள் செலவு, நிறைந்த திறனும், குறைந்த சத்தமும் கொண்ட இன்ஜின்கள், பயணிகள் விண்ணைப் பார்த்து ரசிப்பதற்காக நீண்ட ஜன்னல்கள் என பல சிறப்புகள் இந்த விமானத்தில் உண்டு.

இந்த விமானம், சிட்னியில் இருந்து சிகாகோ வரையில் தரையிறங்காமல், தொடர்ந்து பறக்கும் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன், ஏர்பஸ் நிறுவனம் ஏ 380 என்ற உலகின் மிகப் பெரிய விமானத்தை அறிமுகப்படுத்தியது. இந்த விமானத்திற்கு பல்வேறு நாடுகளில் இருந்து ஆர்டர்கள் குவிகின்றன. இந்நிலையில், ஏ 380 ரக விமானத்திற்கு போட்டியாக போயிங் நிறுவனம் 'டிரீம்லைனர்’ விமானத்தை தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது. ஏ 380 விமானத்தில் 500க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்ய முடியும். இதனால், நீண்ட தூர விமான சேவையில் ஏர்பஸ் ஏ 380 விமானங்கள் வரவேற்பைப் பெற்றுள்ளன. ஆனால் 'டிரீம்லைனர்’ விமானத்தில் 290 பயணிகள் மட்டுமே பயணிக்க முடியும். இருப்பினும் இரு நகரங்களுக்கு இடையிலான, சொகுசு பயணத்திற்கு 'டிரீம்லைனர்’ விமானம் ஏற்றதாக இருக்கும் என்று கூறப்படுகிறது. எப்படியோ மிக நீண்ட தாமதத்திற்குப் பின், உலகின் கனவுலக விமானம் என்று கருதப்படும் 'டிரீம்லைனர்’ விமானம் அறிமுகப்படுத்தப்பட்டு பயணிகள் சேவைக்காக வெளி வந்துள்ளது.

ஐ-போன் 4 வருகிறது : தமிழை ஒருபடி உயர்த்த போகிறது

எதிர்வரும் செப்தெம்பரில் ‘ஐ-போன் 4’ எனப்படும் புதுவகை கையடக்க இணைய பேசி மலேசியாவில் அறிமுகம் காண விருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது ஆங்கிலத்திலும் சிறப்பாகத் தமிழ்மொழியிலும் செயல்படும் ஆற்றல் கொண்டது என அறியப்படுகிறது.
ஆப்பிள் நிறுவனம் தனது மேம்படுத்தப்பட்ட "ஐபோன்" புதிய பதிப்பை வெற்றிகரமான அறிமுகப்படுத்தியுள்ளது. மலேசியாவில் இந்தப் புதிய ஐபோன் - 4ஆம் பதிப்பு வரும் செப்தெம்பரில் வெளியிடப்படவுள்ளதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.

‘ஐபோன்’ எனும் புதிய வகையிலான தொழில்நுட்பத் தொடர்பு கருவி 2007இல் சந்தைக்கு வந்தன. இதுவரையில் 5 கோடி ஐபோன்கள் விற்பனையாகி உள்ளதாக அறியப்படுகிறது. தற்போது மேலும் பல புதிய வசதிகளுடன் மேம்படுத்தப்பட்ட "ஐபோன்-4" சந்தைக்கு வந்துள்ளது.

ஐபோன்-4 எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தக் கையடக்க இணைய பேசி எல்லா வகையான ஏந்துகளையும் உள்ளடக்கியதாகத் திகழ்கிறது. iOS 4 எனும் இயங்குதளத்தில் மிகவேகமாக இயங்கும் ஆற்றல் கொண்ட இந்த புதிய கையடக்கப் பேசியில், வீடியோ அழைப்பு, உயர்தரமான கணித்திரை, 5 மெகா பிக்சல் படக்கருவி, லெட் ஃப்ளாச், உச்ச திறன் கொண்ட வீடியோ பதிவு, கம்பியில்லா இணையச் சேவை என ஏராளமான நவினமய சிறப்புத் தன்மைகள் உள்ளன.

முந்தைய ஐபோனை விட தற்போதைய "ஐபோன்-4" வடிவத்தில் மெலிதாகவும் சிறியதாகவும் உள்ளது. இதில், தொடர்ச்சியாக 7 மணி நேரம் பேசவும், 10 மணி நேரம் இணையத்தில் உலாவவும் முடியுமாம்.

இத்தனைக்கும் மேலாக, தமிழர்கள் அனைவரும் பெருமைபடும் வகையில் ‘ஐபோன் 4’ தமிழில் உள்ள வரிகளை அப்படியே தமிழில் கொடுக்கும் வகையில் உருவாக்கம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

iOS4இல் இயல்பாகச் சேர்க்கப்பட்டுள்ள தமிழ் இயக்கத்திற்கு மேலும் மெருகூட்டும் வகையில் மலேசியக் கணிஞர் முத்து நெடுமாறன் செல்லினம் எனும் தமிழ்ச் செயலியை வடிவமைத்துச் சாதனைப் புரிந்திருக்கிறார். இதன்வழி தமிழ்மொழியை அடுத்த தொழில்நுட்பத்திற்கு மேம்படுத்தியிருப்பதோடு, தமிழை மேலும் ஒரு படி உயர்த்தியிருக்கிறார்.

ஐபோன்-3G, ஐபோன்-3GS மற்றும் ஐபோன்-4 ஆகிய நான்கு வகை ஐபோன் கருவிகளிலும், இரண்டாம் மற்றும் மூன்றாம் தலைமுறை ஐ-பாட் டச் (iPod Touch) கருவிகளிலும் iOS4 இயங்குதளம் இயங்கும். இந்த இயக்கத்தைப் பெற்ற அனைவருமே தமிழ் வரிகளைத் திரைகளில் அனுபவிக்கலாம். மலேசிய உருவாக்கமான செல்லினத்தைக் கொண்டு தமிழ் வரிகளைக் கோர்த்து, மின் அஞ்சலாகவும் குறுஞ்செய்தியாகவும் தமிழ் வரிகளை அனுப்பலாம். மேலும் இந்தக் கருவிகளில் வடிவமைக்கப்பட்ட முகநூல்(Facebook) டிவிட்டர் (Twitter) போன்ற செயலிகளிலும் தமிழ் வரிகளைத் தடையின்றிக் காணலாம்.

நவின தொழில்நுட்பத்திற்கு ஏற்ப தமிழ்மொழியும் செயல்பட முடியும் என்பதற்கு இந்தப் புதிய கண்டுபிடிப்பு நல்ல சான்றாக அமைந்திருக்கிறது

இன்டெல் நிறுவனத்தின் ஆபாரமான கண்டுபிடிப்பு

கணினி தொழில்நுட்பத்தின் அதிமேதாவியான இன்டெல் நிருவனத்தினர் ஆராய்ச்சி ஒன்றில் ஈடுபட்டனர்.அதில் ஈடுபட்ட பணியாளர்கள் கூறும் தகவல்கள் கணனி உலகத்தையே வியப்புக்குள்ளாக்கியுள்ளது.
கற்பனை மட்டும் செய்யுங்கள் போதும் எங்கள் கணினி அனைத்தையும் செய்து கொடுக்கும் என்கின்றனர் இந்த பணித்திட்டத்தில் ஈடுபட்டுள்ளோர்.இனிமேல் மௌஸ், கீபோர்ட் வைத்து நீங்கள் வேலை செய்ய தேவையில்லை. இணையத்தில் தேட வேண்டுமா?உதவியாளருக்கு கடிதம் எழுதுவதற்கான வாக்கியங்கள் கூற வேண்டுமா மனதில் நினைத்தால் மட்டும் போதும். என்ன நினைக்கின்றீர்கள் என்பதை மூளையை படிப்பதன் மூலம் கண்டுபிடித்து செய்து கொடுத்து விடுமாம் கணினிகள்.

இதற்காக கணினியை பயன்படுத்துவோரின் மூளையைப் பற்றிய விபரமான வரைபடக் குறிப்பு ஒன்றை உருவாக்கி மனிதன் என்ன நினைக்கும் போது எந்த வகையான மாற்றம் மூளையில் உருவாகும் என்பதையும் ஆராய்ச்சி செய்துள்ளனர் இந்த பொறியாளர்கள்.

ஆரம்ப கட்ட சோதனை முடிவுகளின் படி நினைப்பதை கண்டறிந்து அதை வார்த்தைகளாக மாற்ற முடியும் என்பது தெரிய வந்துள்ளதாகவும் இன்டெல் கூறுகிறது.

குழந்தை ரோபோ : ஜப்பானின் புதிய வரவு

“நியோனி’ என்ற புதிய ரோபோ இயந்திரத்தை ஜப்பான் நாட்டில் ஒசாகா பல்கலைக் கழகம் உருவாக்கியுள்ளது. “நியோனேட்’ என்ற வார்த்தையில் இருந்து புதிய ரோபோவிற்கு, “நியோனி’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது. “நியோனேட்’ என்றால் பிறந்த குழந்தை என ஜப்பான் மொழியில் பொருள்.

புதிய ரோபோவிற்கு பிறந்த குழந்தை என பெயர் சூட்டப்பட்டாலும், இந்த ரோபோ நன்கு வளர்ச்சியடைந்த குழந்தை போல் செயல்படும். இந்த ரோபோ, தானே எழுந்து நிற்கும்; எந்த பக்கம் வேண்டுமானாலும் திரும்பும்; தவழும். இந்த புதிய ரோபோவில் இரண்டு வீடியோ கேமராக்கள் உள்ளன. அதன் காது பகுதியில், இரண்டு மைக்ரோ போன்கள் பொருத்தப்பட்டுள்ளன. உடல் பகுதியில் மோட்டார் மற்றும் உணர்வு கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.

இந்த ரோபோ குறித்து இதை உருவாக்கிய குழுவின் இயக்குனர் அசடா மினோரு கூறியதாவது:


மனிதர்களுடன் சேர்ந்து வாழும் திறமை பெற்றுள்ள ரோபோக்களை உருவாக்குவதுதான் எங்கள் லட்சியம். அதற்கு தேவை மனிதர்களைப் பற்றி முதலில் புரிந்து கொள்ள வேண்டும். எனவே, மனிதர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளக் கூடிய ரோபோக்களை தயாரித்துள்ளோம். இந்த குறிப்பிட்ட ரோபோ திட்டம், குழந்தைகளை மையமாக கொண்டிருக்கும் என்று கூறியுள்ளார்.

பிறந்த குழந்தை ரோபோவைத் தவிர, குழந்தைகள் ரோபோக்களும் இந்த ஆராய்ச்சியில் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த ரோபோக்கள், மனிதர்களின் பேச்சை புரிந்து கொள்ளும்; பொருட்களை அடையாளம் காணும். பின்னர் அதற்கு ஏற்றார் போல் பதிலளிக்கும். “கின்டி’ என்ற இன்னொரு ரோபோவையும் இந்த பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ளது. ஐந்து வயது குழந்தை போல் தோற்றமளிக்கும் இந்த ரோபோ, முகத்தில் பலவித உணர்ச்சிகளை வெளிப்படுத்தும். மனித வளர்ச்சியை ஆராய்வதற்காக இந்த வகை ரோபோக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த ஆராய்ச்சி வெற்றி பெற இன்னும் பல ஆண்டுகள் ஆகும். எனினும், மனித இன வளர்ச்சி மர்மத்திற்கு இதுபோன்ற ரோபோக்கள் மூலம் விடை கிடைக்குமா என்பது கேள்விக்குறித்தான்!