Saturday, September 11, 2010

3D ஒரு அதிசயம் : இனி படங்களை தொட்டுபார்க்கலாம்!

3டி தொழில்நுட்பம் நாளுக்கு நாள் வளர்ச்சி அடைந்து வருகிறது. ஹாலிவுட்டில் பல சினிமாக்கள் 3டி-யில் வருகின்றன. வீட்டு நிகழ்ச்சிகளை 3டி-யில் படம் பிடிக்கும் கேமராக்கள் வந்துவிட்டன.
3டி ஒளிபரப்பு அனுமதிக்கு டிஸ்கவரி உள்ளிட்ட சேனல்கள் விண்ணப்பித்துள்ளன. 3டி காட்சிகளை பார்த்து ரசிக்கும் டிவியை எல்ஜி, சோனி, பானாசோனிக் நிறுவனங்கள் அறிமுகப்படுத்துகின்றன. இந்நிலையில், திரையில் தெரியும் 3டி காட்சிகளை தொட்டு தடவிப் பார்க்கும் வசதியை ஜப்பான் தேசிய அறிவியல் தொழில்நுட்ப நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

திரையில் ஒரு பலூன் வருகிறது என வைத்துக்கொள்வோம். அதை எடுப்பதுபோல கையை கொண்டு சென்றால், நம் கையில் பலூன் தவழ்வதுபோல காட்சி மாறும். பலூனின் பிம்பம் நமது கையிலேயே விழும். பலூனை தத்ரூபமாக நம் கையிலேயே பார்க்கலாம்.

குத்துவது போல விரலை கொண்டு சென்றால், பலூன் பிம்பம் மாறுதல் அடைந்து குழி உருவானது போல காட்சியளிக்கும். பிரத்யேக கேமராக்களின் உதவியுடன் நமது கைகளின் இயக்கம் தொடர்ந்து படம் பிடிக்கப்பட்டது அதற்கேற்ப காட்சிகள் மாறுகின்றன.

இதன் அறிமுக நிகழ்ச்சியின்போது இதை அந்த நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் செய்துகாட்ட, பார்த்தவர்கள் மிரண்டே போய்விட்டனர். முக்கியமான ஆபரேஷன்கள், வீடியோகேம் ஆகியவற்றில் இத்தொழில்நுட்பத்தை பயன்படுத்த உள்ளனர்.

காருக்குள் 'வொயிஸ் பேஸ்புக் அப்டேட்டிங் '

பிரபல வாகன உற்பத்தி நிறுவனமான ஜெனரல் மோட்டர்ஸ் (ஜிஎம்) புதிய வகை மென்பொருள் ஒன்றினைத் தற்போது பரீசீலித்து வருகின்றது.

கார் சாரதியின் கட்டளைக் குரலுக்கு இணங்க 'பேஸ்புக்'கில் 'ஸ்டேடஸ் அப்டேட்' செய்வதே இம்மென்பொருளாகும்.

மேலும் 'பேஸ்புக்'கில், தான் பெற்றுள்ள செய்திகளினை (மெசேஜஸ்) வார்த்தைகளாக கேட்பதையும் இது உள்ளடக்கவுள்ளது.

மேற்படி சொற்கள் மூலமான 'அப்டேட்கள்', 'ஒன்ஸ்டார் நெட்வோர்க்' மூலமாக மேற்கொள்ளப்படவுள்ளன.

'ஒன்ஸ்டார்' நிறுவனம் வாகனங்களின் நவீன தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துவதில் பிரபல்யம் பெற்றதாகும். தனது பிரதான போட்டியாளரான 'போர்ட்' நிறுவனத்தின் நவீன தொழில்நுட்பங்களுக்குப் போட்டியாகவே இம்முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கையடக்கத் தொலைபேசி மூலமான 'மெசேஜ்'களுக்கு உடனடியாகப் பதிலளிக்கும் வகையில் காரின் ஸ்டீரிங்குடன் இணைந்த வகையிலான தொழில்நுட்பம் ஒன்றையும் அது பரீட்சித்து வருகின்றது.

மேலும் அதிநவீன தொழில்நுட்ப வானொலி, நெவிகேசன் சிஸ்டம் போன்றவற்றையும் ஜிஎம் நிறுவனம் அறிமுகப்படுத்தவுள்ளது.

Monday, September 6, 2010

உலகில் அதிகமாக உபயோகிக்கப்படும் மென் பொருட்கள்

உலகில் அதிகமாக உபயோகிக்கப்படும் மென்பொருட்கள், சமூக இணையத்தளங்கள் மற்றும் இதர சேவைகளின் பாவனையாளர்களின் எண்ணிக்கை தொடர்பான ஆய்வொன்றினை பிரபல நிறுவனமொன்று நடத்தியுள்ளது.

இப் புள்ளிவிபரம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அந்நிறுவனம் இந்த எண்ணிக்கையானது தொடர்ந்து மாற்றமடைந்து வருவதனால் உத்தேச அளவில் இதனை வெளியிடுவதாக அறிவித்துள்ளது.

இப்புள்ளிவிபரமானது கடந்த கால அறிக்கைகள் மற்றும் ஆய்வுகளையும் அடிப்படையாகக் கொண்டது.

அதன் படி

1) டுவிட்டர் - 200 மில்லியன் பாவனையாளர்கள்.

பிரபல சமூக மற்றும் மைக்ரோ புளகிங் தளமான டுவிட்டர் வேகமாக மொத்தமாக 200 மில்லியன் பாவனையாளர்களைக் கொண்டுள்ளதுடன் வேகமாக வளர்ந்து வரும் ஒரு தளமாகும்.

2) விண்டோஸ் லைவ் மெசெஞ்சர் - 305 மில்லியன் பாவனையாளர்கள்

உலகின் மிகப்பெரிய மெசெஞ்சர் சேவையான இது, தற்போது ஸ்கைப் மற்றும் பேஸ்புக் என்பனவற்றினால் பெரிய பின்னடைவைச் சந்தித்து வருகின்றது.

3) பேஸ்புக்- 510 மில்லியன் பாவனையாளர்கள்

உலகில் தற்போது அதிகமாக பேசப்பட்டு வரும் தளம் இது. மிகவும் வேகமாக வளர்ந்து வரும் ஒரு சமூக வலைப்பின்னல் தளமுமாகும்.

4) ஸ்கைப் - 530 மில்லியன் பாவனையாளர்கள்

உலகில் அதிக பாவனையாளர்களைக் கொண்ட வி.ஒ.ஐ.பி எனப்படும் இணைய மூலமான தொலைபேசி சேவையினை வழங்கும் நிறுவனம் இது.

5) எபல் ஐ டியூன் - 800 மில்லியன் பாவனையாளர்கள்

அப்பிள் நிறுவனத்தின் இசைசார்ந்த மென்பொருளான இது, உலகம் முழுவதும் மிகப்பிரபலம் பெற்றது.

6) அடோப் பிளாஸ் - 1.5 பில்லியன் பாவனையாளர்கள்

அடோப் பிளாஷ், இணையத் தள பாவனையாளர்கள் பரவலாகப் பயன்படுத்திவரும் ஒரு மென்பொருளாகும். _

கூகுள் ' குரோம் 6 ' உத்தியோகபூர்வ வெளியீடு

கூகுள் ' குரோம் ' இயங்குதளம் தனது 2ஆவது பூர்த்தியை நேற்றுக் கொண்டாடியது.

இந்நிலையில் அது ' குரோம் 6 ' என்ற மேம்படுத்தப்பட்ட புதிய தொகுப்பினை நேற்று வெளியிட்டுள்ளது.

தற்போதைய அறிக்கைகளின்படி, இயங்குதள சந்தையின் பிரகாரம் அதன் பங்கு 7.5 வீதமாகும்.

அதன் போட்டியாளரான 'இன்டர் நெட் எக்ஸ்புளோரர்' மற்றும் 'மொஸிலா பயர்பொக்ஸ்' என்பன முறையே 60.4% மற்றும் 22.9% இயங்குதள சந்தையைக் கொண்டுள்ளன.

கூகுள் குரோமின் முன்னைய தொகுப்பானது சுமார் 15 முக்கிய பாதுகாப்பு குறைபாடுகளினை கொண்டதாகக் காணப்பட்டது.

ஆனால் தற்போதைய ' குரோம் 6 ' தொகுப்பானது அக்குறைபாடுகள் அற்றதெனவும் நன்கு மேம்படுத்தப்பட்டதெனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இது முன்னைய தொகுப்பினை விட 6 மடங்கு வேகமாக இயங்கக்கூடியதுடன் மேம்படுத்தப்பட்ட 'யூஸர் இன்டர் பேஸ்'ஸினையும் கொண்டதாகும்.

இது 'ப்ளேஸ் ஐ' கொண்ட நிலையிலேயே கிடைக்கப் பெறுகின்றமை மற்றும் எச்டிஎம்ல் 5 வசதிகளைக் கொண்டுள்ளமை விசேட அம்சங்களாகும்.

மேலும் இலகுவான பாவனைக்காக 'புக்மார்க்ஸ்' பட்டன்கள் இயங்குதளத்தின் புதியதொரு இடத்தில் தரப்பட்டுள்ளன.

டுவிட்டருக்கு 145 மில்லியன் பாவனையாளர்கள்

மைக்ரோ புளொகிங் தளமான டுவிட்டர் 145 மில்லியன் பாவனையாளர்கள் என்ற இலக்கினை எட்டியுள்ளது.

மேலும் அதனை கையடக்கத் தொலைபேசிகளின் மூலம் பாவிப்பவர்களின் எண்ணிக்கை கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து 62% அதிகரித்திருப்பதாகவும் அதன் பிரதம நிறைவேற்று அதிகாரி இவான் வில்லியம்ஸ் தெரிவிக்கின்றார்.

அதன் கையடக்கத் தொலைபேசி மூலமான பாவனையாளர்களின் அதிகரிப்புக்கு அதன் விசேட 'அப்ளிகேசன்'களே காரணமென அவர் மேலும் தெரிவிக்கின்றார்.

இவ்விசேட 'அப்ளிகேசன்'களானது 'ஐபோன்', 'பிளக்பெரி' மற்றும் 'அண்ட்ரோயிட்' மூலம் இயங்கும் கையடக்கத் தொலைபேசிகளுக்காக உருவாக்கப்பட்டவை.

இவற்றில் 'ஐபோன்' மற்றும் 'பிளக்பெரி' மூலமான பாவனையாளர்கள் அதிகரித்துக் காணப்படுகின்றனர் என மேலும் அவர் தெரிவிக்கின்றார்.

இதன் மொபைல் தளம் m.twitter.com ஆகும்.

மேலும் 14 வீதமான கையடக்கத் தொலைபேசிகளின் மூலமான டுவிட்டர் பாவனையாளர்களில் 8 வீதமானவர்கள் குறுந்தகவல்கள் மூலம் மேற்படி தளத்திற்குப் பிரவேசிக்கின்றனர்

உலகின் அதிவேக விரைவுக் கணினி

நொடிக்கு ஒரு பெட்டாஃப்ளாப்ஸ் (Petaflops) கணக்கீடுகளை நிகழ்த்தும் அதிவிரைவுக் கணினி (Supercomputer) களை உருவாக்கும் ஆய்வில் பல ஆண்டுகளாக ஈடுபட்டு வந்த அமெரிக்க நிறுவனம் IBM, தற்போது அதனைச் சாத்தியப் படுத்தியுள்ளது.
கணினி உலகில் நன்கு அறியப்பட்ட IBM நிறுவனமும், நியூ மெக்சிகோவிலிருக்கும் லாஸ் அலமாஸ் தேசிய ஆய்வுச் சாலையும் இணைந்து இந்தக் கணினியை உருவாக்கியுள்ளன. `ரோட்ரன்னர்' (Roadrunner) என்று அழைக்கப்படும் இந்த கணினி 100 மில்லியன் டாலர் செலவில் உருவாக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

IBM இதற்கு முன் உருவாக்கிய அதிவிரைவுக் கணினியான ப்ளூ ஜீன் (Blue Gene)-ஐக் காட்டிலும் இது இருமடங்கு வேகமாக செயல்படும். ஓர் ஒப்பீட்டிற்காக ப்ளூ ஜீன் அதிவிரைவுக் கணினி அதற்கடுத்த அதிவிரைவுக் கணினியைவிட மும்மடங்கு வேகத்தில் கணக்கீடுகள் செய்ய இயலும்.

தற்போதைக்கு அமெரிக்க அணு ஆற்றல் சோதனைக் கணக்கீடுகளுக்குப் பயன்படுத்தப் பட இருக்கும் இக்கணினி, அது மட்டுமல்லாது கட்டுமானப் பொறியியல், மருத்துவ ஆய்வு, இயற்கை எரிபொருள் உருவாக்கம், எரிபொருளை மிச்சப்படுத்தும் வாகனங்களை வடிவமைத்தல், மருத்துவ சிகிச்சை, மற்றும் நிலத்தடி எரிபொருள் ஆய்வு உள்ளிட்ட பற்பலப் பயன்பாடுகளுக்காகவும் பயன்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய உலகின் மிக அதிக ஆற்றல் கொண்ட மடிக்கணினியைப் போல் ஒரு லட்சம் மடங்கு ரோட்ரன்னரின் கணக்கிடும் ஆற்றல் உள்ளது என IBM தெரிவித்துள்ளது. இந்தக் கணினியை உருவாக்க சுமார் 6 ஆண்டுகள் ஆனதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிவிரைவுக் கணினிகள் இயங்கும் வேகத்தை "ஃப்ளாப்" என்ற அலகில் அளப்பர். ஒரு ஃப்ளாப் என்பது ஒரு நொடியில் செய்யப்படும் பின்னக் கணக்கீடுகள் FLoating-point Operations Per Second - FLOPs).

ஒரு ட்ரில்லியன் (பத்தாயிரம் கோடி) பின்னக் கணக்கீடுகளை ஒரு கணினி ஒரு நொடியில் செய்ய இயன்றால் அதன் செயல் திறன் கிகாஃப்ளாப் (Gigaflops) என்றும், ஆயிரம் ட்ரில்லியன் பின்னக் கணக்கீடுகளை ஒரு நொடியில் செய்ய இயன்றால் அதன் செயல் திறன் டெராஃப்ளாப் (Teraflops) என்றும் ஒரு மில்லியன் ட்ரில்லியன் பின்னக் கணக்கீடுகளை ஒரு நொடியில் செய்ய இயன்றால் அதன் செயல் திறன் பெட்டாஃப்ளாப் (Petaflops) என்றும் அளக்கப்படுகிறது. ரோட் ரன்னரின் மீஉயர் கணக்கிடும் திறன் 1.7 பெட்டாஃபிளாப்" (Petaflop) ஆகும்.

இந்தியாவிலும் அதிவிரைவுக் கணினிகள் உருவாக்கப்பட்டுள்ளன. மேம்பட்டக் கணினியக மையம் (Center for Advanced Computing - CDAC) உருவாக்கிய அதிவிரைவுக் கணினியின் செயல்திறன் 1005 கிகாஃப்ளாப்கள் என்பது தனித் தகவல்