Monday, January 9, 2012

PDF கோப்புகளை HTML பக்கமாக மாற்றுவதற்கு


PDF கோப்புகளை HTML பக்கமாக மாற்றுவதற்கு


பல நேரங்களில் நம்மிடம் இருக்கும் PDF கோப்புகளை எப்படி HTML பக்கமாக மாற்றலாம் என்று தேடிக்கொண்டிருப்போம். இதற்கு உதவுவதற்காக ஒரு மென்பொருள் உள்ளது.
PDF கோப்புகளை திறந்து கொப்பி செய்து தான் HTML பக்கம் உருவாக்குவோம். ஆனால் நேரடியாக PDF கோப்புகளை HTML கோப்பாக மாற்ற ஒரு மென்பொருள் உதவி புரிகிறது.
இத்தளத்திற்கு சென்று நாம் PdfMasher என்ற டூலை தரவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். விண்டோஸ், மேக், லினக்ஸ் போன்ற அனைத்து இயங்குதளத்திற்கும் துணை செய்யும் வகையில் இந்த டூல் உருவாக்கப்பட்டுள்ளது.
எந்த பக்கத்தை முகப்பு பக்கமாக வைக்க வேண்டும் என்பதில் தொடங்கி எங்கெங்கு என்னென்ன தகவல்கள் எல்லாம் கொடுக்க வேண்டும் என்பதை தேர்ந்தெடுத்தாலே போதும் சில நிமிடங்களில் எளிதாக நாம் HTML பக்கம் உருவாக்கலாம்.

விண்டோஸ் கணணிகளில் கடவுச்சொற்களை அறந்துகொள்ளும் வழிமுறைகள்!


விண்டோஸ் கணணிகளில் கடவுச்சொற்களை அறந்துகொள்ளும் வழிமுறைகள்!!

ஒவ்வொருவரும் தங்களது கணணி மற்றும் அதில் பதிந்துள்ள தகவல்களின் பாதுகாப்பிற்காக கடவுச்சொல்லை அமைத்திருப்பர்.
பெரும்பாலானவகள் இந்த கடவுச்சொல்லானது மிகவும் பாதுகாப்பானது, வலிமையனது எனவும் கணணிக்கு கடவுச்சொல்லை அமைத்துவிட்டால் யாராலும் அந்த கடவுச்சொல்லை மீறி கணணியை பயன்படுத்த இயலாது என எண்ணுகின்றனர்.
ஆனால் அது உண்மையில்லை. உங்கள் கணணியின் கடவுச்சொல்லை சில வழிகள் மூலமாக கைப்பற்ற இயலும்.
முதலில் கடவுச்சொற்கள் கணணியில் எவ்வாறு கையாளப்படுகின்றன என பார்க்கலாம். Security Accounts Manager(SAM) என்பது ஒரு Registry file ஆகும். இது கணணியில் “C:WINDOWSsystem32config” என்ற இடத்தில் சேமிக்கப்படும்.
இந்த File இல் தான் LM hash, NTLM hash போன்ற மறையாக்க முறைகளில் மாற்றம் செய்யப்பட்டு சேமிக்கப்படுகிறது.
இந்த SAM File இனை திறந்து படித்து விட்டால் கடவுச்சொல் தொடர்பான விடையங்களை அறிந்துவிடலாம். ஆனால் விண்டோஸ் இயங்குதளத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் பொழுது SAM File இனை கொப்பி செய்யவோ திறக்கவோ விண்டோஸ் அனுமதிக்காது. இதை திறப்பதற்கு நாம் வேறு ஒரு இயங்குதளத்திலிருந்து கணணியை Boot செய்ய வேண்டும்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில் Live booting என்பது பயன்படுகிறது. Live booting என்றால் நாம் சில மென்பொருட்களை பென்ரைவ் இல் போர்டபிளாக பதிந்து பயன்படுத்துவது போல இயங்குதளத்தை பென்ரைவில் அல்லது சிடி இல் பதிந்து அதை கணணியில் பதியாமலே பயன்படுத்துவது ஆகும்.
இந்த வேலையை செய்வதற்கென்றே உருவாக்கப்பட்டது Ophcrack என்ற மென்பொருளாகும். இதை சிடியிலோ அல்லது பென்ரைவிலோ பதிந்து பயன்படுத்த முடியும். இந்த மென்பொருளை Ophcrack  இங்கு கிளிக் செய்து தரவிறக்கம் செய்யவும்.
1. இனி நீங்கள் தரவிறக்கம் செய்த ISO file இனை சிடி யில் பதியவும்.
2. கணணியை Restart செய்து விண்டோஸ் ஆரம்பிப்பதற்கு முன் F8 key இனை அழுத்தி Boot order இல் சிடியை தெரிவு செய்து என்டர் அழுத்தவும். (F8 அழுத்துவது சில கணணிகளுக்கு கீ மாறக்கூடும் கீ முடியாவிட்டால் BIOS மெனுவில் Boot order இல் 1st Boot Drove என்பதில் சிடி இனை தெரிவு செய்திடவும்.)
3. இனி மென்பொருள் இயங்க தொடங்கிவிடும், அடுத்து தோன்றுகிற செய்தியில் Ophcrack Graphic mode என்பதை தெரிவு செய்து என்டர் அழுத்தவும்.
4. சிறிது நேரத்தில்(2-3 நிமிடம்) உங்கள் கணணியின் கடவுச்சொல் காட்டப்படும்

இணையத்தின் வேகத்தை இலகுவாக அதிகரிக்கும் – மென்பொருள்


இணையத்தின் வேகத்தை இலகுவாக அதிகரிக்கும் – மென்பொருள்

இணையத்தை பயன்படுத்தும் ஏராளமானோருக்கு அதன் வேகத்தை அதிகரிப்பதற்கு
எவ்வாறான நடவடிக்கைகளை கணினியில் மேற்கொள்ள வேண்டும் என்பது பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

Auslogics Internet Optimizer  என்ற மென்பொருளின் மூலம் சாதரண பாவனையாளரும் கூட இணைய வேகத்தை அதிகரிப்பதற்கான
ஆட்டோ ஆப்டிமைசேஷன் செயற்பாடுகளை மேற்கொள்ளலாம்.
Auslogics Internet Optimizer  கணினியில் நிறுவிய பின்னர் முதலில்
உங்கள் இணைய வேகத்தை தேர்வு செய்து
Analyze ஐ அழுத்துங்கள். இதன் மூலம் இணைய வேகம் பரீசிலிக்கப்பட்டு மாற்றங்கள் செய்ய வேண்டிய செட்டிங்குகளின் விபரங்கள் திரட்டப்பட்டு பட்டியலிடப்படும்.
அதில் விரும்பிய அல்லது அனைத்தையும் தேர்வு செய்து
Optimize  ஐ அழுத்துங்கள்.
அதன் பின்னர் கணினியை ரீ ஸ்டார்ட் செய்தல் வேண்டும்.
Manual Optimization  ஐ தேர்வு செய்து விரும்பிய செட்டிங்குகளை மட்டும் மாற்றிக்கொள்ளலாம்
தரவிறக்கம் செய்ய - http://www.auslogics.com/en/

ஹேக் செய்யப்பட்ட பேஸ்புக் கணக்கை திரும்ப பெறுவதற்கு


ஹேக் செய்யப்பட்ட பேஸ்புக் கணக்கை திரும்ப பெறுவதற்கு


சமூக வலைதளங்களில் அதிகமானோர் பயன்படுத்துவது பேஸ்புக் தளமாகும். சுமார் 700 மில்லியனுக்கும் அதிகமான பயனர் கணக்குகளை உள்ளடக்கிய மிகப்பெரிய இணையதளமாகும்.
பேஸ்புக் தளத்தின் அறிவிப்பின் படி ஒரு நாளைக்கு சராசரியாக 600,000 ஹாக்கிங் முயற்சிகள் நடக்கிறதாம். நீங்கள் எவ்வளவு கடினமான கடவுச்சொல் வைத்திருந்தாலும் இப்பொழுது இருக்கும் தொழில்நுட்ப வளர்ச்சியில் சுலபமாக கடவுச்சொல்லை திருடி கணக்கை முடக்கி விடுகின்றனர். அப்படி பேஸ்புக் கணக்கை முடக்கிவிட்டால் எப்படி மீட்பது என பார்ப்போம்.
இதற்கு பேஸ்புக்கில் ஒரு வசதி கொடுத்து உள்ளனர். அந்த வசதியின் மூலம் சுலபமாக ஹாக் செய்யப்பட கணக்கை திரும்ப பெறலாம். நீங்கள் பேஸ்புக்கில் இருந்தால் signout கொடுத்து வெளியேறுங்கள்.

பிறகு இந்த லிங்கில் கிளிக் செய்யுங்கள். உங்களுக்கு ஒரு விண்டோ வரும். அந்த விண்டோவில் உள்ள My Account Is Compromised என்ற பட்டனை கிளிக் செய்யவும். உங்களுக்கு அடுத்த விண்டோ ஓபன் ஆகும்.
அந்த விண்டோவில் உங்கள் கணக்கை திரும்ப பெற பல வசதிகள்(email, mobile number, friends name) இருக்கும். அதில் உங்களுக்கு எந்த வழியில் வேண்டுமோ அந்த வழியை தேர்வு செய்து கொள்ளுங்கள். (இங்கு எப்படி ஈமெயில் மூலம் மீட்பது என பார்ப்போம்).
மின்னஞ்சல் முகவரியை கொடுத்த பின்னர் கீழே உள்ள Search என்ற பட்டனை அழுத்துங்கள்.
அடுத்து உங்களுக்கு இன்னொரு விண்டோ ஓபன் ஆகும். நீங்கள் கொடுத்த மின்னஞ்சல் முகவரியில் உள்ள பேஸ்புக் கணக்கை காட்டும்.
உங்கள் கணக்கில் கடைசியாக இருந்த கடவுச்சொல்லை அந்த இடத்தில் கொடுக்கவும். கடவுச்சொல்லை கொடுத்தவுடன் கீழே உள்ள Continue என்ற பட்டனை அழுத்தவும்.
அடுத்த விண்டோ ஓபன் ஆகும். அதில் உள்ள Send Codes and Login to Gmail என்ற பட்டனை அழுத்தவும்.
உங்களுக்கு இன்னொரு Pop-up விண்டோ ஓபன் ஆகும். அதில் இந்த ஜிமெயிலின் முகவரி மற்றும் கடவுச்சொல் கேட்கும் அதை சரியாக கொடுத்த பின்னர் ஜிமெயிலின் அனுமதி கேட்கும் அதில் Allow கொடுத்து விட்டால் போதும் உங்களுக்கு ஒரு விண்டோ வரும்.
இப்பொழுது புதிய கடவுச்சொல்லை தெரிவு செய்து கொண்டு கீழே உள்ள Change Password என்பதை கொடுத்து விட்டால் போதும் உங்களின் கணக்கு திரும்ப பெறப்படும். இனி நீங்கள் உங்கள் பேஸ்புக் கணக்கை எப்பொழுது போல உபயோகிக்கலாம்