Friday, March 18, 2011

இலவச வயர்லெஸ் இணைப்பை பயன்படுத்த வயர்லெஸ் எயர் கிராக்கிங்(Wireless Air Cracking) முறை


[ புதன்கிழமை, 26 சனவரி 2011, 10:58.34 மு.ப GMT ]
வயர்லெஸ் என்பது மின்சார கடத்திகள் அல்லது கம்பிகளின் பயன்பாடின்றி தகவல்களை பரிமாற்றுவது ஆகும். இந்த தூரங்கள் குறைந்த அல்லது அதிகமான தூரங்களாக கூட இருக்கலாம்.
வயர்லெஸ் வலையமைப்புகள் அதிகமாக கல்லூரிகள் மற்றும் அலுவலகங்களில் பயன்படுத்தப்படுகிறது. வயர்லெஸ் அமைப்பு உள்ள எந்தவொரு இடத்தில் இருந்தும் நாம் இணையத்தை பயன்படுத்த முடியும்.
எனினும் அங்கீராமற்ற நபர்கள் பயன்படுத்தாத வகையில் கடவுச்சொல் கொடுக்கப்பட்டிருக்கும். இவ்வாறான பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மீறி வயர்லெஸ் அமைப்பை பயன்படுத்த முடியும்.
இதில் ஒரு முறையே வயர்லெஸ் எயர் கிராக்கிங் முறை. இதற்கான மென்பொருளை தரவிறக்கம் செய்ய

புளுடூத் பயன்பாடும் பாதுகாப்பும்


[ வியாழக்கிழமை, 20 சனவரி 2011, 08:41.34 பி.ப GMT ]
வயர்கள் எதுவுமில்லாமலும் தானாகவும் இணைப்பினை ஏற்படுத்திக் கொள்வதுதான் புளுடூத். நம் அன்றாட வாழ்க்கையின் பல அம்சங்களை எளிமைப்படுத்தும் விஷயங்கள் இதில் உள்ளன.
நாம் கம்ப்யூட்டர்கள், பொழுது போக்கு சாதனங்கள், டெலிபோன் ஆகியவற்றைப் பயன்படுத்தும்போது அவை தங்களுக்குள் பல வகைகளில் இணைத்துக் கொள்கின்றன.
பலவித வயர்கள், கேபிள்கள், ரேடியோ சிக்னல்கள், இன்ப்ரா ரெட் கதிர்கள் எனப் பல வகைகளில் இணைப்பு ஏற்படுத்தப்படுகிறது. ஆனால் புளுடூத் சாதனங்களை இணைப்பதில் தனி வழி கொண்டுள்ளது.
குறைந்த மின் சக்தி பயன்பாடு, ஒரே நேரத்தில் எட்டு சாதனங்களுடன் தொடர்பு, எந்த வகையிலும் ஒன்றுக்கொன்று குறுக்கிட்டு செயல் இழக்காத நிலை, இணைந்திடும் சாதனங்கள் நேராக இருந்திடத் தேவையற்ற நிலை, 32 அடி வட்டத்தில் புளுடூத் தொழில் நுட்பம் கொண்ட எந்த சாதனத்தையும் கண்டு இணையும் லாவகம் எனப் பல ப்ளஸ் பாய்ண்ட்களை அடுக்கிக் கொண்டு செல்லலாம்.
புளுடூத் இயக்கப்பட்ட சாதனங்கள் அவற்றின் எல்லைகளுக்குள் இருக்கையில் யாரும் இயக்காம லேயே ஒன்றையொன்று புரிந்து கொள்கின்றன. முகத்தை மூடிய நிலையிலும் கண்களை மட்டுமே கண்டு ரோமியோவை ஜூலியட் அடையாளம் கண்டது போல புளுடூத் உள்ள சாதனங்கள் ஒன்றையொன்று கண்டு கொள்கின்றன.
ஒரு எலக்ட்ரானிக் உரையாடல் அவற்றுக்குள் ஏற்படுகிறது. இந்த சாதனங்களைப் பயன்படுத்துபவர் எந்த பட்டனையும் இதற்கென அழுத்த வேண்டியதில்லை. இந்த எலக்ட்ரானிக் உரையாடல் இரண்டு அல்லது மூன்று சாதனங்களுக்கிடையே ஏற்பட்டவுடன் (அவை கம்ப்யூட்டர் சிஸ்டமாகவோ, மொபைல் போனாகவோ, ஹெட்செட் ஆகவோ, பிரிண்டராகவோ இருக்கலாம்) அந்த சாதனங்கள் தங்களுக்குள் ஒரு நெட்வொர்க்கினை ஏற்படுத்திக் கொள்கின்றன.
இதை பெர்சனல் ஏரியா நெட்வொர்க் எனக் கூறலாம். ஆங்கிலத்தில் இந்த நெட்வொர்க்கை PAN அல்லது piconet என அழைக்கின்றனர். இரண்டிற்கு இடையே ஏற்படும் இந்த நெட்வொர்க் அதே அறையில் மற்ற இரண்டிற்கு இடையே ஏற்படும் நெட்வொர்க்கால் பாதிக்கப் படுவதில்லை.
இணைப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் இந்த இரண்டு சாதனங்களுக்கிடையே தகவல் பரிமாற்றம் ஏற்படுகிறது. இது ஒலி, போட்டோ, வீடியோ, பைல் என எதுவாகவும் இருக்கலாம்.
புளுடூத் பயன்படுத்தப்படும் சாதனங்கள்: அன்றாட வாழ்வின் நடைமுறையை இந்த புளுடூத் இணைப்பு சந்தோஷப்படுத்துகிறது. எடுத்துக் காட்டாக புளுடூத் ஹெட்செட்கள் உங்களுடைய மொபைல் போன், ரேடியோ ஆகியவற்றுடன் வயர் எதுவுமின்றி இணைப்பு கொடுத்து செயல்பட வைக்கின்றன.
மொபைல் போனில் இந்த வசதியைப் பெற A2DP (Advanced Audio Distribution Profile) என்ற தொழில் நுட்பம் இருக்க வேண்டும். ஹெட்செட்டும் அதே தொழில் நுட்பத்துடன் வடிவமைக்கப் பட்டிருக்க வேண்டும். பாடல்களை மட்டுமல்ல, போனுக்கு வரும் அழைப்புகளையும் இதில் மேற்கொள்ளலாம்.
பிரிண்டர்களும் புளுடூத் தொழில் நுட்பத்தில் இயங்கும் வகையில் இப்போது வடிவமைக்கப்படுகின்றன. உங்கள் மொபைல் போனில் போட்டோ ஒன்று எடுத்த பின்னர் அதனை அச்செடுக்க பிரிண்டருடன் இணைக்க வேண்டியதில்லை. பிரிண்டரையும் மொபைல் போனையும் புளுடூத் மூலம் இணைப்பை ஏற்படுத்தினால் போதும்.
கார்களை ஓட்டிச் செல்கையில் நம் மொபைல் போனுக்கு அழைப்பு வந்தால் யாரிடமிருந்து அழைப்பு வருகிறது என்பதனை எடுத்துக் காட்டி போனை எடுக்காமலேயே பேசச் செய்திடும் தொழில் நுட்பம் கொண்ட சாதனங்கள் வந்துள்ளன. உள்ளே பயணம் செய்திடும் ஐந்து நபர்களின் போன்களை இவ்வாறு இணைத்து இயக்கலாம்.
அதே போல மொபைல் போனில் ஜி.பி.எஸ். ரிசீவர் இருந்தால் எக்ஸ்டெர்னல் ஜி.பி.எஸ். சாதனம் ஒன்றை புளுடூத் மூலம் இணைத்து தகவல்களைப் பெறலாம். இறுதியாக கம்ப்யூட்டர் இணைப்பைக் கூறலாம்.
உங்களுடைய மொபைல் போனை புளுடூத் மூலம் கம்ப்யூட்டருடன் இணைத்து பைல்களை அப்டேட் செய்திடலாம். புளுடூத் வசதி கொண்ட கீ போர்டுகளும் இப்போது வந்துவிட்டன. இவற்றையும் கம்ப்யூட்டர் மற்றும் செயல்பாட்டிற்கு ஏற்ப மொபைல் போனுடனும் இணைக்கலாம்.
புளுடூத் செக்யூரிட்டி:
எந்த நெட்வொர்க் இணைப்பு ஏற்படுத்தினாலும் அங்கே பாதுகாப்பு பிரச்னை ஏற்படுகிறது. இங்கும் அதே கதை தான். உங்கள் மொபைல் போனில் புளுடூத்தை இயக்கிவிட்டு சிறிது தூரம் காரிலோ ஸ்கூட்டரிலோ செல்லுங்கள். ஏதாவது இன்னொரு புளுடூத் சாதனம் குறுக்கிட்டு இணைப்பை ஏற்படுத்தும்.
உங்கள் போன் திரையில் இது போல ஒரு சாதனம் இந்த பைலை அனுப்பவா என்று கேட்கிறது? ஏற்றுக் கொள்கிறாயா? என்ற கேள்வி இருக்கும். உடனே இணைப்பைக் கட் செய்வதே நல்லது. ஏனென்றால் இது போல வரும் பைல்களில் வைரஸ் இருக்கும். எனவே தான் இணைப்பு இருந்தாலும் பைலை ஏற்றுக் கொள்ளும் அனுமதியை நாம் தரும்படி மொபைல் போனின் புளுடூத் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு புளுடூத் மூலம் அடுத்த சாதனங்களைக் கைப்பற்றி கெடுப்பதை “bluejacking,” “bluebugging” மற்றும் “Car Whisperer” என அழைக்கின்றனர். எனவே நம்பிக்கையான நபர் அல்லது மொபைல் போன் அல்லது சாதனம் என்று உறுதியாகத் தெரிந்தாலொழிய இத்தகைய இணைப்பை அனுமதிக்கக் கூடாது.

பல ஸ்கைப் கணக்குகளை ஒரே நேரத்தில் லொகின் செய்வதற்கு


[ சனிக்கிழமை, 19 பெப்ரவரி 2011, 03:53.37 மு.ப GMT ]
பொதுவாக ஸ்கைப் பாவனையாளர்கள் நண்பர்களுடன் அரட்டைக்கு ஒன்று, தனியான பாவனைக்கு ஒன்று என பல ஸ்கைப் கணக்குகளை திறந்து வைக்க ஆசைப்படுவார்கள். 
ஆனால் கணனியில் அவற்றை ஒவ்வொன்றாகத்தான் லொகின் செய்ய முடியும். ஒரே நேரத்தில் இரண்டையும் ஒரே கணனியில் லொகின் செய்ய முடிந்தால் எப்படி இருக்கும்.
அதற்காக தான் இரண்டையுமே ஒரே நேரத்தில் லொகின் செய்யுமாறு வசதியைத் தருவதற்கே MultiSkype Launcher என்ற மென்பொருளை இலவசமாக உருவாக்கியிருக்கிறார்கள்.
இந்த மென்பொருளை தரவிறக்கி கணனியில் நிறுவியதும், கிடைக்கும் ஸ்கீரினில் ஸ்கைப் கணக்குகளை சேர்த்து கொள்ளலாம். அவற்றை தேவையான நேரத்தில் லாஞ்ச் ஐ கிளிக் செய்து திறந்து கொள்ளலாம்.

உங்களது ஆங்கில சொற்களின் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டுமா?


[ வெள்ளிக்கிழமை, 04 மார்ச் 2011, 04:19.15 மு.ப GMT ]
ஓன்லைன் மூலம் எண்ணற்ற பல சேவைகள் இன்றும் நமக்கு கிடைத்து கொண்டு தான் இருக்கிறது. அந்த வகையில் இன்று ஆங்கில Vocabulary -ஐ மேம்படுத்துவதற்கு வசதியாக ஓன்லைன் மூலம் விளையாடும் விளையாட்டு வந்துள்ளது.
எந்த ஒரு மொழியிலும் சொல்வளம் தெரிந்தால் அந்த மொழியில் நாம் வல்லவர்களாக இருக்கலாம். இதே போல் தான் ஆங்கில மொழியில் சொல்வளம்(Vocabulary) அதிகரிக்க நமக்கு ஒரு தளம் உதவுகிறது.
எதையும் விளையாட்டாக கூறினால் பலரும் ஏற்றுக் கொள்வர் என்பதை மனதில் கொண்டு ஆங்கில சொல்வளத்தை வைத்து ஓன்லைன் விளையாட்டு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இந்தத் தளத்திற்கு சென்று நாம் புதிதாக ஒரு இலவச பயனாளர் கணக்கு உருவாக்கி கொண்டு நுழையலாம்.
ஆரம்ப நிலையில் இருப்பவர்கள் முதல் Expert வரை அனைவரும் தங்களுக்கு தகுந்தபடி Level ஐ தேர்ந்தெடுத்து விளையாடலாம்.
தினமும் டிக்ஸ்னரியில் பல வார்த்தைகள் படிப்பதை கொள்கையாக வைத்திருப்பவர்கள் இனி ஓன்லைன் மூலம் எங்கிருந்து வேண்டுமானாலும் இந்த விளையாட்டை விளையாடி தங்களின் Vocabulary அறிவை வளர்த்துக் கொள்ளலாம்.

குறுக்கே யாராவது வந்தால் தானாக நின்று விடும் கார் (வீடியோ இணைப்பு)


[ வெள்ளிக்கிழமை, 04 மார்ச் 2011, 08:18.12 மு.ப GMT ]
உலகம் முழுவதும் சாலை விபத்துகளில் உயிரிழப்பவர்கள் மற்றும் காயமடைபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. விபத்துகளை தடுக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதன் முடிவாக ஒரு உபகரணம் ஒன்றை வொல்வோ நிறுவனத்தார் உருவாக்கியுள்ளனர். இது பாதசாரிகள் மற்றும் முன்னால் வரும் வாகனங்களை இணங்கண்டு கொள்வதுடன், அவை மோதலாம் என்ற நிலை வரும் போது எச்சரிக்கை சமிக்ஞைகளை எழுப்பும்.
இது மட்டுமல்லாமல் உடனடியாக தானியங்கி முறையில் நிறுத்திக் கொள்ளவும் முடியும் படி இதனை தயாரித்துள்ளனர். இதனை தனது கார்களில் பொருத்தி, மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை நடவடிக்கைகளும் வெற்றியடைந்துள்ளன.
ராடார் மற்றும் கேமரா தொழில்நுட்பங்களை பயன்படுத்தி இக்காரானது முன்னால் வரும் வாகனங்கள் மற்றும் பாதசாரிகளை இணங்கண்டு கொள்கின்றது. அவற்றின் மீது கார் மோதலாம் என்ற நிலையில் எச்சரிக்கை சமிக்ஞை எழுப்படும். அதை சாரதி பொருட்படுத்தாத நிலையில் கார் தானாக நிறுத்தப்படும்.
எனினும் இவ்வுபகரணமானது இரவிலும் மோசமான காலநிலையின் போதும் இயங்காது என வொல்வோ தெரிவிக்கின்றது.

மின்னஞ்சல்களை படித்து சொல்லும் புதிய கார்


மின்னஞ்சல்களை படித்து சொல்லும் புதிய கார்
[ சனிக்கிழமை, 05 மார்ச் 2011, 04:31.00 மு.ப GMT ]
நாளுக்கு நாள் தொழில்நுட்பத்தின் வளர்ச்சிக் அதிகரித்துக் கொண்டு தான் இருக்கிறது. கற்பனையில் நினைப்பவற்றை இன்று நிஜத்திற்கு மாற்றித் தந்து கொண்டிருக்கிறது இன்றைய விஞ்ஞானமும் தொழில்நுட்பமும்.
அந்த வரிசையில் நாம் எதிர்பார்க்காத புதிய ஒரு விடயம் தான் நடந்தேறியுள்ளது. அதாவது நமக்கு வருகின்ற மின்னஞ்சல் மற்றும் Facebook and Twitter updates களை உடனுக்குடன் படித்து வாய்ஸ் மூலம் வாகன சாரதிக்கு சொல்லி விடுகின்றது ஒரு கார்.
இது எவ்வாறு சாத்தியப்படுகின்றது என்றால் குறித்த காரில் பயணிக்கும் முன் அதில் தயார் செய்யப்பட்டுள்ள சார்ஜரில் தனது smart phones அல்லது iPads ஐ தொடுத்து விட  வேண்டும். பின்னர் நாம் வாகனத்தை ஓட்டிக் கொண்டிருக்கும் போது நமது பேஸ்புக் அல்லது டிவிட்டரில் புதிதாக தகவல்கள் பரிமாறப்பட்டால், அந்த கார் வாய்ஸ் மூலம் பரிமாற்றப்பட்ட தகவலை படித்து சொல்கின்றது.
அதைப் போலவே மின்னஞ்சல் வருகின்ற போதும் அவற்றை அப்படியே படித்து சொல்லி விடுகின்றது. இக்கார் “இணையத்தளக்கார்” என அழைக்கப்படுகிறது. அண்மையில் ஜெனீபாவில் நடைபெற்ற மோட்டார் வாகன கண்காட்சியில் இந்த இலத்திரனியல் இணையக்கார் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.
ஏராளமானவர்கள் இத்தொழில்நுட்பத்தை பாராட்டிச் சென்றுள்ளனர். இது மாத்திரமின்றி இக்காருக்குள் Wi-Fi transmitter தொழில்நுட்பமும் காணப்படுகின்றமையால் லாப்டெப்பையும் இலகுவாக பயன்படுத்த முடியும் என கூறப்படுகின்றது. 

2020 ல் தொழில்நுட்பம் எப்படி இருக்கும் (வீடியோ இணைப்பு)


[ ஞாயிற்றுக்கிழமை, 06 மார்ச் 2011, 10:16.58 மு.ப GMT ]
காலத்திற்கு ஏற்றவாறு வரும் மாற்றங்கள் மிகவும் வியக்கத் தக்கவையாக உள்ளன. அந்த வகையில் விஞ்ஞான உலகில் படிப்படியாக பல பரிமாண கண்டுபிடிப்புக்கள் வருகின்றன.
இயற்கையுடன் விஞ்ஞான ரீதியாக மோதும் அளவுக்கு மாற்றமடைந்துள்ளான் மனிதன்.
இன்றைய உலகில் தொழில்நுட்பம் முன்னேறியுள்ள நிலையில் 2020 ல் தொழில்நுட்பம் எவ்வாறு மாற்றம் கண்டிருக்கும் என்று நீங்கள் கற்பனை செய்து பார்த்ததுண்டா?
இதோ விரைவில் அசத்த வரவிருக்கும் அடுத்த கண்டுபிடிப்புக்களின் மாதிரிகள்.


ஒரே கிளிக்கில் நீங்கள் விரும்பும் இணைய பக்கத்தை வரவழைக்க


[ திங்கட்கிழமை, 07 மார்ச் 2011, 04:12.19 மு.ப GMT ]
நாம் ஒரு இணைய பக்கத்தை திறக்க வேண்டுமெனில் முதலில் பிரவுசரை தேர்வு செய்ய வேண்டும். அடுத்து அதில் உள்ள முகவரியில் நமது இணையதள முகவரி தட்டச்சு செய்து என்டர் செய்ய வேண்டும்.
இதை விட எளிமையாக இணையத்தை திறக்க என்ன வழி என இப்போது பார்க்கலாமா? டாக்ஸ்பாரில் காலியாக உள்ள இடத்தில் மவுஸை கொண்டு ரைட் கிளிக் செய்யவும். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். அதில் Lock the Taskbar எதிரில் டிக் அடையாளம் இருந்தால் அதை எடுத்து விடவும்.
அடுத்து Toolbars என்கின்ற இடத்திற்கு கர்சரை கொண்டு செல்லவும். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ கிடைக்கும். அதில் Address என்கின்ற இடத்தில் கிளிக் செய்யவும். இப்போது டாக்ஸ்பாரில் உங்களுக்கு Address என்கின்ற பெயர் கிடைக்கும்.
அதை மவுஸால் பிடித்து இழுத்தால் முகவரி பட்டை வெளியில் வரும். அதில் உங்களுக்கு தேவைப்படும் முகவரியை தட்டச்சு செய்து என்டர் தட்டினால் உங்கள் தளமுகவரிக்கு நீங்கள் கொண்டு செல்லப்படுவீர்கள்.
நீங்கள் விரும்பி உபயோகிக்கும் தளமுகவரியினை இதில் பூர்த்தி செய்து வைத்துக் கொள்ளலாம். இனி நீங்கள் பிரவுசரை கிளிக் செய்தாலே போதும் உங்களுடைய இணையதளம் ஓபனாகி விடும்.

இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 6 ன் பயன்பாட்டை ஒழிப்பதற்கு மைக்ரோசாப்ட் கடும் முயற்சி


[ செவ்வாய்க்கிழமை, 08 மார்ச் 2011, 04:05.09 மு.ப GMT ]
15 ஆண்டுகள் பழமையான இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 6 ஐ ஒழித்துக்கட்டுவதற்கான பிரச்சாரங்களை மைக்ரோசாப்ட் தனது பாணியில் தொடங்கியுள்ளது.
இதற்கான ஒரு இணையத்தளத்தை ஆரம்பித்து அதில் உலகெங்கும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் உலாவி 6 ஐ பயன்படுத்துபவர்களின் வீதத்தை கணக்கிட்டு வருகிறது.
அதில் ஏனைய புதிய உலாவிகளை பயன்படுத்த தொடங்குமாறும் உங்கள் நண்பர்கள் யாராவது இன்னும் 15 ஆண்டுகள் பழமையான IE 6 உலாவியை பயன்படுத்தி வந்தால் அவர்களுக்கு அதை மேம்படுத்துவதற்கு சொல்லிக் கொடுங்கள் என்றும் வலியுறுத்தி வருகிறது.
2011 ஆம் ஆண்டில் நாம் இருக்கிறோம் புதிய இணைய மாற்றங்களுக்கு ஈடு செய்வதற்கு ஏற்ற வகையில் புதிய உலாவிகளை பயன்படுத்த தொடங்குவோம். 15 ஆண்டுகள் பழமையான IE 6 க்கு விடை கொடுக்கும் நேரம் இதுவாகும் என்று தெரிவிக்கிறது மைக்ரோசாப்ட்.
இணையத்தளத்தை வடிவமைக்கும் வெப்மாஸ்டர்கள் IE 6 க்கும் ஏற்ற வகையில் ஒரு தளத்தை வடிவமைப்பதற்கும் மணிக்கணக்காக தங்கள் பொன்னான நேரத்தை செலவழிக்கிறார்கள். அவர்களுக்கு உதவும் வகையிலும் இந்த செயற்பாட்டை தொடங்கியுள்ளது மைக்ரோசாப்ட்.
IE 6 ஐ இந்தியாவிலும், சீனாவிலும் அதிகமானோர் பயன்படுத்துகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. வலைப்பதிவுகள் மற்றும் இணையத்தளங்கள் நடத்துபவர்களாயின் உங்கள் தளங்களிலும் IE 6 ஐ தடுப்பதற்குரிய முயற்சிகளை மேற்கொள்ளுமாறும் கேட்டுள்ளது மைக்ரோசாப்ட்.

உங்களது முக்கியமான கோப்புகளை மற்றவர்களிடமிருந்து மறைக்க


[ வெள்ளிக்கிழமை, 11 மார்ச் 2011, 04:22.49 மு.ப GMT ]
நாம் சில முக்கியமான கோப்புகளை வைத்து இருப்போம். அதாவது நம்முடை pen Drive ஐ ஒருவரிடம் கொடுக்கும் போது அதில் நாம் நிறைய தகவல்களை சேமித்து வைத்து இருப்போம்.
எடுத்துக்காட்டாக Word Document, Excel Worksheet, PowerPoint Presentation, Pdf, mp3, video, softwares, games போன்றவைகள் இருக்கலாம். இப்படியான சில முக்கியமான கோப்புகள் யாரிடமும் சென்று விடக் கூடாது என்று சில நேரங்களில் நாம் நினைக்கலாம். அடுத்தவர் உங்கள் கோப்புகளை திருடாமல் இருக்க இந்த மென்பொருளை பயன்படுத்தலாம்.
இதற்கு எல்லாம் மென்பொருளா? சாதாரணமாக ஒரு Hidden செய்தால் போதும் தானே அல்லது அந்த நேரத்தில் குறிப்பிட்ட கோப்பை அழித்து விட்டு அல்லது cut செய்து வைத்தால் ஒன்றும் பிரச்சனை இல்லை என்று நீங்கள் நினைக்கலாம். இது நமக்கு சிரமத்தைத் தான் ஏற்படுத்தும்.
1. இந்த மென்பொருளை கணணியில் பதிய வேண்டிய அவசியம் இல்லை.
2. இதற்குறிய password முற்றிலும் வித்தியாசமானது. அதாவது இங்கு password ஆக பயன்படுவது Text Document ஆகும். என்ன புரிய வில்லையா? உங்களுடைய folder ஐ திறக்க வேண்டும் என்றால் Right click செய்து New > New Text Document இந்த கோப்பை உருவாக்கினால் தான் உங்களுடைய folder open ஆகும்.
இதற்கு முதலில் download செய்து கொள்ளுங்கள். உங்களுக்கு விருப்பமான இடத்தில் இதனை நிறுவிக் கொள்ளுங்கள்.
Folder Personal என்பதனை open செய்யவும். ஏதாவது ஒரு கீயை அழுத்தவும். இப்போது Personal என்ற ஒரு Folder உருவாகி இருக்கும். அதில் முக்கியமான கோப்புகளை காப்பி செய்து விட்டு folder ஐ மூடி விடுங்கள்.
மீண்டும் Folder Personal என்பதனை open செய்து ஏதாவது ஒரு கீயை அழுத்தவும் அந்த Folder Lock ஆகிவிடும்.
Unlock செய்வதற்கு குறிப்பிட்ட இடத்தில் அதாவது Folder Personal.exe இருக்கும் இடத்தில் New Text Document இந்த பைல் இருந்தால் மாத்திரமே Unlock செய்து கொள்ள முடியும்.
இந்த மென்பொருளை பயன்படுத்தி ஐந்து முறை மாத்திரமே unlock செய்து கொள்ள முடியும். அடுத்த முறை unlock செய்யும் போது Register பண்ண வேண்டும் என்ற செய்தி தோன்றும் என்பதனை மறந்து விடாதீர்கள்.

கூகுள் மற்றும் பேஸ்புக் பக்கம் செல்ல வேண்டாம்


[ வியாழக்கிழமை, 10 மார்ச் 2011, 04:52.32 மு.ப GMT ]
முதலில் கூகுள் அதன் பிறகு பேஸ்புக், யூடியூப், டிவிட்டர், ஜிமெயில். இப்படி தினந்தோறும் விஜயம் செய்யும் இணையதளங்களின் பட்டியல் எல்லோருக்குமே உண்டு.
இதில் வரிசை மாறலாம். ஆனால் தினமும் தவறாமல் செல்லும் இணையதளங்கள் என்று சில நிச்சயமாக இருக்கும். இவற்றில் சில இணையதளங்களில் மணிக்கணக்கில் செலவிடும் ப‌ழக்கம் சிலருக்கு இருக்கலாம்.
கெட்ட பழக்கம் என்று சொல்லும் அளவுக்கு சிலர் குறிப்பிட்ட அந்த தளங்களுக்கு அடிமையாகி இருப்பதுண்டு. அதாவது அவர்கள் நினைத்தாலும் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு அந்த தளங்களில் அதிக நேரத்தை வீண‌டித்து கொண்டிருப்பார்கள்.
உதாரணத்திற்கு பேஸ்புக்கே கதி என இருக்கும் பேஸ்புக் பிரியர்கள் இருக்கின்றனர். சதா யூடியூப்பில் வீடியோ காட்சிகளாக பார்த்து கொண்டிருக்கும் யூடியூப் பிரியர்களும் இருக்கின்றனர். கூகுலின் இமெயில் சேவையான ஜிமெயில் பற்றி சொல்லவே வேண்டாம். புதிய இமெயில் வந்துள்ளதா என்று பார்க்க கை அடிக்கடி பரபரக்கும்.
இப்படி குறிப்பிட்ட இணையதளங்கள் மற்றும் இணைய சேவைகளுக்கு அடிமையாகி போவதை இணைய யுகத்தின் பலவீனம் என்றும் சொல்லலாம். இதற்கு மாற்று மருந்து தேவை என்று நினைத்தால் அதற்கும் ஒரு இணையதளம் இருக்கிறது. கீப்மீஅவுட் இது அந்த இணையதள‌ம்.
அதாவது நானே விரும்பினாலும் அந்த இணையதளத்தின் பக்கம் போக அனுமதிக்க கூடாது என நீங்கள் கருதும் இணையதளங்களின் பட்டியலில் இந்த தளத்தில் சமர்பித்தீர்கள் என்றால் அந்த தளங்களின் பக்கம் செல்லாமல் இந்த தளம் பார்த்து கொள்ளும்.
இனி பேஸ்புக் பக்கமே போககூடாது என சபதம் எடுத்து கொண்டு இந்த தளத்தில் பேஸ்புக் பெயரை சமர்பித்தீர்கள் என்றால் அதன் பிறகு பேஸ்புக் பக்கம் உங்கள் அனுமதிக்காமல் இந்த தளம் உங்களை காப்பாற்றும். அந்த அளவுக்கு எல்லாம் கட்டுப்பாடு வேண்டாம் என்று நினைத்தாலும் தேவைக்கேற்ப கட்டுப்படுத்தி கொள்ளலாம்.
ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட நேரம் பேஸ்புக் பக்கம் போக அனுமதிக்காமல் இருக்கும் படி வரைமுறை செய்து கொள்ளலாம். பேஸ்புக் என்பது உதாராணம் தான். அவரவர் பழக்கம் மற்றும் விருப்பத்திற்கெ ஏற்ப எந்த தளத்தை வேண்டுமானாலும் குறிப்பிட்டு எப்படி வேண்டுமானாலும் கட்டுப்படுத்தி கொள்ளலாம்.
ஒவ்வொரு நாளும், வாரத்தில் ஒரு நாள் அல்லது மாதத்தில் ஒரு நாள் விரதம் இருப்பது போல என எப்படி வேண்டுமானாலும் இணையவாசிகள் தங்களுக்கான கட்டுப்பட்டை நிர்ணயித்து கொள்ளலாம்.
இணையத்தில் சுயக்கட்டுப்பாடு இல்லாதவர்களுக்கு இந்த சேவை நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும் என்பதோடு தேவையானதாகவும் இருக்கும். இப்படி இணையவாசிகள் தங்களுக்கு தாங்களே விலங்கு மாட்டிக்கொள்ளும் இணையதளங்களில் இருந்து முன்ன‌ணி 10 இணையதளங்களின் பட்டியல் முகப்பு பக்கத்தில் இடம் பெறுகிறது. உங்களூக்கான தளம் அந்த பட்டியலில் இருந்தால் அதனை கிளிக் செய்து கொள்ளலாம்.
ஆங்கிலம் உள்ளிட்ட சில மொழிகளில் இந்த தளம் செயல்படுகிறது. பிரபலமான தளங்களின் பட்டியலில் ஆங்கிலம் தவிர பிற மொழி தளங்கள் சிலவும் இடம் பெறுகின்றன. அந்த வகையில் மற்ற மொழிகளில் கோலோச்சும் தளங்களையும் இதை பார்த்தே அறிய முடியும்.
இணையவாசிகள் தங்களை தாங்களே கட்டுப்படுத்தி கொள்ளவும் இந்த தளத்தை பயன்படுத்தலாம் அல்லது பெரியவர்கள் தங்கள் பிள்ளைகள் பேஸ்புக் போன்ற தளங்களில் அதிக நேரம் செலவிடுவதை கட்டுப்படுத்த விரும்பினாலும் அவர்கள் சார்பில் இந்த சேவையை பயன்படுத்த‌லாம்.

தொழில்நுட்பத்தின் பிரம்மாண்ட தயாரிப்பு: பேசும் கார்


[ வியாழக்கிழமை, 10 மார்ச் 2011, 04:37.24 மு.ப GMT ]
அடுத்த பெட்ரோல் நிலையம் எங்கு இருக்கிறது? மாலை நேரத்தில் போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் பயணிப்பதற்கு எது சிறந்த வழி? என்பன போன்ற கேள்விகளுக்கு பதில் அளிக்கும் வகையில் பேசும் கார் உருவாக்கப்பட்டு வருகிறது.
இந்த கார் அடுத்த ஆண்டு இங்கிலாந்து நாட்டில் விற்பனைக்கு வர இருக்கிறது.
மிக நவீனமான வாய்ஸ் கம்யூனிகேஷன் சிஸ்டம் பொருத்தப்பட்டு இருப்பதன் மூலம் கார்கள் பேசுகின்றன.
இந்த சிஸ்டத்தை சின்ங் என்ற கம்பெனி உருவாக்கி உள்ளது. இந்த சிஸ்டத்தில் 19 மொழிகளில் 10 ஆயிரம் கட்டளைகள் இணைக்கப்பட்டு உள்ளன.

ஜிப் பைல்களின் கடவுச்சொல்லை உடைக்க


[ சனிக்கிழமை, 12 மார்ச் 2011, 04:46.39 மு.ப GMT ]
அதிகமாக உள்ள கோப்புகளின் அளவை சுருக்க பயன்படுத்தப்படும் பார்மெட்டுகளில் ஜிப் பார்மெட்டும் ஒன்றாகும். இதற்கு நாம் கடவுச்சொல் கொடுத்து உருவாக்க முடியும்.
ஒரு சில நேரங்களில் இவ்வாறு உருவாக்கும் கோப்புகளின்  கடவுச்சொல்லை நாம் மறந்து விடுவோம். அப்போது அந்த குறிப்பிட்ட கோப்புகள் ஜிப்பைலாக மட்டுமே இருக்கும். ஒரு சில கணணி பயனாளர்கள் வைரஸ் தாக்காமல் இருப்பதற்காக டாக்குமெண்ட்களை ஜிப் பைலாக மட்டுமே வைத்திருப்போம்.
அதனுடைய ஒரிஜினல் கோப்புகள் யாவும் நம்மிடம் இருக்காது. அவை அனைத்தும் ஜிப் பைல்களாக மட்டுமே இருக்கும். அது போன்ற சூழ்நிலையில் அந்த கோப்புகளின் கடவுச்சொல்லை நீக்கினால் மட்டுமே ஒரிஜினல் கோப்புகளை நம்மால் பயன்படுத்த முடியும்.
இவ்வாறு ஜிப் பைல்களின் கடவுச்சொல்லை உடைக்க மென்பொருள் உள்ளது. இந்த மென்பொருளை இணையத்தில் இருந்து தரவிறக்கி கணணியில் நிறுவிக் கொள்ளவும்.
பின் இந்த அப்ளிகேஷனை ஓபன் செய்யவும். அதில் கடவுச்சொல் இட்டு பூட்டப்பட்ட ஜிப் பைலை தேர்வு செய்து கொள்ளவும். அடுத்து எங்கு சேமிக்க வேண்டுமோ அந்த இடத்தை தேர்வு செய்து கொள்ளவும்.
Characters என்ற பாக்சில் எந்த மாற்றமும் செய்ய வேண்டாம். MinLength, MaxLength என்பதில் இலக்கங்களை குறிப்பிட்டு கொள்ளவும். பின் Start பொத்தானை அழுத்தவும்.
நீங்கள் குறிப்பிட்ட இடத்தில் கோப்பானது கடவுச்சொல் நீக்கப்பட்டு சேமிக்கப்படும். ஆனால் கடவுச்சொல்லை நீக்க அதிக நேரம் ஆகும். உங்களுடைய கடவுச்சொலை பொருத்து நேரம் வேறுபடும்.

ஒரு முறை சார்ஜ் செய்தால் போதும்: பல மாதங்கள் உபயோகிக்கலாம்


[ ஞாயிற்றுக்கிழமை, 13 மார்ச் 2011, 04:32.37 மு.ப GMT ]
ஒரு முறை சார்ஜ் செய்தால் போதும் பல மாதங்கள் பேசக்கூடிய அதி நவீன செல்போன் தயாரிக்கப்பட்டுள்ளது.
செல்போன்களில் உள்ள பேட்டரிகள் மின்சாரம் மூலம் சார்ஜ் செய்து தான் பேசப்பட்டு வருகிறது. பெரும்பாலான செல்போன்களில் தினசரி சார்ஜ் செய்யும் நிலை உள்ளது.
ஒரு சில செல்போனில் மட்டுமே கூடுதலாக மேலும் ஒரு நாளுக்கு சார்ஜ் நிற்கும். தற்போது ஒரு முறை சார்ஜ் செய்தால் போதும். மாதக் கணக்கில் பேசக்கூடிய செல்போன்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.
அதற்கான விசேஷமான பேட்டரிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. அது சாதாரண செல்போன் பேட்டரிகளை விட 100 மடங்கு அதிக சக்தி வாய்ந்தவை.
அவை உலோக டியூப்களுக்கு பதிலாக மிகச் சிறிய அளவிலான நானோடியூப்கள் மூலம் தயாரிக்கப்பட்டுள்ளன.
இவை மனிதனின் ரோமத்தை விட 10 ஆயிரம் மடங்கு மிகச்சிறியதாகும். இல்லினோயிஸ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் இதை வடிவமைத்துள்ளனர். இது விரைவில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் யாஹூ கணக்கை ஜிமெயிலில் தொடர


[ திங்கட்கிழமை, 14 மார்ச் 2011, 04:19.58 மு.ப GMT ]
நீங்கள் Yahoo மற்றும் Gmail கணக்கு வைத்திருந்து இனிமேல் Gmail லிலேயே தொடரலாம் என்ற முடிவிற்கு வந்தால், உங்கள் Yahoo கணக்கிலுள்ள தொடர்புகள் மற்றும் மின்னஞ்சல்களை ஜிமெயில் கணக்கின் மூலம் பயன்படுத்தலாம்.
இதற்கு முதலில் உங்கள் பயனர் பெயரும், கடவுச் சொல்லும் கொடுத்து ஜிமெயில் கணக்கில் நுழையுங்கள்.
ஜிமெயில் திரையில் வலது மேல் மூலையிலுள்ள Settings லிங்கை கிளிக் செய்யுங்கள். அதில் Accounts and Import என்ற டேபை கிளிக் செய்து, Import mail and contacts பட்டனை அழுத்துங்கள்.
இனி வரும் திரையில் உங்கள் Yahoo மெயில் கணக்கை கொடுத்து Continue பட்டனை கிளிக் செய்யுங்கள்.
தொடரும் அடுத்த திரையில் உங்கள் யாஹூ கணக்கின் கடவுச் சொல்லை கொடுத்து Continue பட்டனை கிளிக் செய்யுங்கள்.
அடுத்த திரையில் இம்போர்ட் செய்ய வேண்டியவற்றை தேர்வு செய்யவும். ஒருமுறை சரி பார்த்த பின்னர் Start Import பட்டனை கிளிக் செய்யவும். அடுத்த இறுதி திரையில் OK பட்டனை கிளிக் செய்யவும்.
அவ்வளவு தான் நாம் இம்போர்ட் செய்யும் மெயில்களின் அளவைப் பொறுத்து இம்போர்ட் செய்யும் நேரம் மாறுபடும்.

புவிச்சுழற்சி வேகம் அதிகரிப்பு: பகல் பொழுதின் நேரம் குறைவு


[ திங்கட்கிழமை, 14 மார்ச் 2011, 08:46.16 மு.ப GMT ]
ஜப்பானிய நிலநடுக்கம் காரணமாக உலகில் இன்னொரு குறிப்பிடத்தக்க மாற்றம் நிகழ்ந்துள்ளது. அதாவது நிலநடுக்கம் ஏற்பட்ட திகதியிலிருந்து புவிச்சுழற்சியின் வேகம் அதிகரித்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட ஜப்பானியப் நில அதிர்வைத் தொடர்ந்து புவியின் சுழற்சி வேகம் 1.6 மைக்ரோ செகண்ட்ஸ் அதிகரித்துள்ளதாக நாசா விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.
நாசா விஞ்ஞானி ரிச்சர்ட் கிரேஸ் இன் ஆய்வின் மூலம் அது உறுதிப்படுத்தப்பட்டு்ள்ளது. அதன் பிரதிபலனாக வெள்ளிக்கிழமையின் நாள் சுருங்கியுள்ளது. அதிலும் பகல் பொழுதின் நேரமே குறைந்துள்ளது.
அவ்வாறு ஒரு நாளின் பொழுது சுருங்கிய நிகழ்வானது வெள்ளிக்கிழமையுடன் நின்று விடும் என்றே நாசா விஞ்ஞானிகள் எதிர்பார்க்கின்றனர். இதற்கு முன்பும் கடந்த வருடம் சிலியில் இடம் பெற்ற பூமியதிர்வின் காரணமாக புவிச்சுழற்சியில் இவ்வாறானதொரு மாற்றம் இடம்பெற்றிருந்தது.
அதே போன்று கடந்த 2004 ம் ஆண்டு சுமாத்ராவில் இடம்பெற்ற பூமியதிர்வின் காரணமாக 6.8 மைக்ரோ செகண்டுகள் குறைவான வேகத்தில் புவிச்சுழற்சி இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

உங்கள் இணையதளம் சரியாக இயங்குகிறதா என்பதை அறிய


[ திங்கட்கிழமை, 14 மார்ச் 2011, 08:59.00 மு.ப GMT ]
ஐபேட்டின் வேகமான வளர்ச்சி தற்போது அனைத்து நாடுகளிலும் ஒரே மாதிரி இருந்து வரும் நிலையில் நம் இணையதளம் ஐபேட்டில் சரியாகத் தெரிகிறதா என்று எளிதாக தெரிந்து கொள்ளலாம்.
நம் இணையதளம் பல சிறப்பம்சம் கொண்டதாக இருந்தாலும் மிக முக்கியமாக அனைத்து ஐபேட்களிலும் சரியாக தெரிய வேண்டும். எந்தப் பிழைச் செய்தியும் கொடுக்காமல் தெரிகிறதா என்று ஐபேட் இல்லாமலே ஓன்லைன் மூலம் தெரிந்து கொள்வதற்கு வசதியாக ஒரு தளம் உள்ளது.
இந்தத்தளத்திற்கு சென்று அதன் கட்டத்திற்குள் நம் இணையதள முகவரியை கொடுத்து Enter பொத்தானை சொடுக்கினால் போதும். அடுத்து வரும் திரையில் நம் இணையதளம் ஐபேட்டில் எப்படித் தெரியுமோ அப்படி தெரியும்.
இதிலிருந்து நம் தளம் ஐபேட்டில் சரியாகத் தெரிகின்றதா என்று எளிதாக சோதித்து பார்த்துக் கொள்ளலாம். எந்த பயனாளர் கணக்கும், எந்த விளம்பரமும் இல்லாமல் தெரியும் இந்தத் தளம் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

அழிந்த கோப்புகளை மீண்டும் பெற


[ வியாழக்கிழமை, 17 மார்ச் 2011, 03:48.33 மு.ப GMT ]
கணணி உபயோகிக்கும் பலர் தங்களின் முக்கியமான கோப்புகளை மீண்டும் எடுக்க முடியாத அளவில் அழித்து விட்டு இதனை எப்படி மீண்டும் பெறுவது என தெரியாமல் தவிக்கின்றனர்.
இழந்த கோப்புகளை மீட்டுத் தரும் இலவச புரோகிராம்கள் பல இணையத்தில் உள்ளன. சில இலவச பதிப்பினையும் கூடுதல் வசதிகளுடன் கூடிய கட்டணம் செலுத்திப் பெறும் பதிப்பினையும் கொண்டதாக இருக்கின்றன.
இந்த பக்கங்களில் இவை குறித்து அடிக்கடி எழுதப்பட்டு வருவதும் வாசகர்களுக்குத் தெரியும். அந்த வகையில் நன்றாகச் செயல்படும் டேட்டா ரெகவரி புரோகிராம் ஒன்று அண்மையில் இணையத்தில் தென்பட்டது. இதன் பெயர் Raid2Raid.
இந்த புரோகிராம் பல்வகைத் திறன் கொண்டது. இது ஹார்ட் டிஸ்க், பிளாஷ் டிரைவ் மற்றும் மெமரி கார்டுகளிலிருந்து கோப்புகளை மீட்டுத் தருகிறது.
இணைத்து அறியக் கூடிய டிரைவில் உள்ள தொலைந்து போன கோப்புகள் எனில் அதனைக் கணணியுடன் இணைத்து மீட்கப்படும் கோப்புகளை ஹார்ட் டிஸ்க்கில் பதியும் படி செட் செய்யப்படுகிறது. பிரச்சினைக்கு உரியது என்னவெனில் ஹார்ட் டிஸ்க் எனில் சம்பந்தப்பட்ட டிரைவினை ஒரு இமேஜாகவும் கொடுக்கிறது.
இந்த இமேஜை எங்கேணும் பதிந்து பாதுகாக்கும் படி வைத்துவிட்டு சம்பந்தப்பட்ட ஹார்ட் டிஸ்க்கினை பார்மட் செய்திடலாம். பின் இமேஜைப் பயன்படுத்தி அழிக்கப்பட்ட கோப்புகளை பெறலாம். தரவிறக்கம் செய்த இந்த புரோகிராமில் டபுள் கிளிக் செய்து இதனை இயக்க வேண்டும்.
பின் எந்த டிரைவில் இருந்து கோப்புகளை ரெகவர் செய்திட வேண்டுமோ அதன் மீது டபுள் கிளிக் செய்திட வேண்டும். சில நிமிடங்களில் அந்த டிரைவில் உள்ள அனைத்து கோப்புகளும் மீட்கப்படக் கூடிய கோப்புகளின் பெயர்கள் உட்பட காட்டப்படும்.
எந்த கோப்புகளை மீட்க வேண்டுமோ அவற்றின் மீது கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் Recover this file என்பதைத் தேர்ந்தெடுத்தால் மீண்டும் கிடைக்கும். அதற்கு முன் மீட்கப்படும் கோப்புகள் எங்கு சேவ் செய்யப்பட வேண்டும் என்பதனையும் தீர்மானித்துத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

தொலைபேசி எண்ணை வைத்தே இருக்கும் இடத்தை ஓன்லைன் மூலம் கண்டறிய


[ வியாழக்கிழமை, 17 மார்ச் 2011, 04:02.43 மு.ப GMT ]
தொழில்நுட்ப மாற்றம் தினமும் வந்து கொண்டு தான் இருக்கிறது. அந்த வகையில் இப்போது நம்முடைய தொலைபேசி எண்ணை வைத்து ஓன்லைன் மூலம் நாம் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்கலாம்.
மொபைல் டிரேஸ் அல்லது போன் டிரேஸ் என்று சைபர்கிரைமில் உள்ளவர்கள் கண்டுபிடிக்க உபயோகப்படுத்தும் அதே தொழில்நுட்பம் தான் இப்போது இதிலும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
ஆனால் நாம் இருக்கும் இடத்தை துல்லியமாக கூறாவிட்டாலும் ஓரளவு சரியாக தான் தெரிவிக்கிறது. உதாரணமாக நமக்கு ஒரு போன் நம்பரிலிருந்து அடிக்கடி தொந்தரவு வந்தால் இந்த இணையதளத்திற்கு சென்று நாம் அந்த மொபைல் நம்பர் அல்லது போன் நம்பரை கொடுத்து எந்த பகுதி என்று தேடினால் ஒரே நொடியில் விடை கிடைக்கும்.
அதுமட்டுமின்றி மேப்பும் சேர்த்தே கொடுக்கின்றனர். இந்த இணையதளத்திற்கு சென்று உங்கள் போன் நம்பர் அல்லது மொபைல் எண்ணை கொடுத்து US or International என்ற பட்டனை அழுத்தவும்.
இப்போது நமக்கு அந்த மொபைல் நம்பரின் விபரங்கள் சில நொடிகளிலே தெரிந்து விடும். அதே போன் நம்பரின் மேப்பை பார்ப்பதற்கு map+ என்ற பட்டனை அழுத்தி மொபைல் நம்பரின் மேப்பயும் பார்க்கலாம்.

மர்ம நகரமான அட்லாண்டிஸ் கடலுக்கு அடியில் கண்டுபிடிப்பு (வீடியோ இணைப்பு)


[ வியாழக்கிழமை, 17 மார்ச் 2011, 09:37.01 மு.ப GMT ]
பல்லாயிரம் நூற்றாண்டுகளுக்கு முன்னர் கடலுக்கு அடியில் மூழ்கிப்போனதாய் நம்பப்படும் மர்ம நகரான அட்லாண்டிஸின் எச்சங்களை கண்டுபிடித்துள்ளதாக அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர்.
இவர்கள் இந்நகரின் எச்சங்களை தென் ஸ்பானியவில் கண்டுபிடித்துள்ளதாகக் குறிப்பிடுகின்றனர். அக்காலத்தில் ஏற்பட்ட சுனாமியில் இது அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் எனவும் அது ஸ்பானிய காடிஸ் நகரிற்கு வடக்கே கடலடியில் மூழ்கிப்போயுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
செய்மதி புகைப்படங்களின் உதவியுடனேயே ஆய்வாளர்கள் இதனை கண்டுபிடித்துள்ளனர். மேலும் இதன் போது ஆழ் நில செய்மதிகள், டிஜிட்டல் மெப்பிங் முறைகள், நீருக்கு அடியில் உபயோகப்படுத்தப்படும் தொழிநுட்பங்கள் என்பவற்றையும் தாம் பயன்படுத்தியதாக இவ்வாராய்ச்சியை மேற்கொண்ட ஹார்ட்போர்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ரிச்சார்ட் ப்ரிஹண்ட் கிராக் தெரிவித்துள்ளார்.
கிரேக்க தத்துவ அறிஞரான பிளேட்டோ(கி.மு 428/427-348/347) தமது "திமேயஸ்" மற்றும் "கிரேட்டஸ்" எனும் உரையாடல்களில் அட்லாண்டிக் பெருங்கடலில் இருந்த லிபியா மற்றும் துருக்கியின் பெரும்பகுதியும் இணைந்த நிலப்பரப்பைக் காட்டிலும் அதிகமான நிலப்பரப்பினைக் கொண்ட தீவாக அட்லாண்டிஸைக் குறிப்பிடுகிறார்.
அத்தீவில் நாகரிகத்தில் முதிர்ச்சியடைந்த ஒரு சமுதாயம் வாழ்ந்ததாகவும் அவர்கள் பல தேசங்களைத் தம் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்ததாகவும், பின்னர் அதீத செல்வச் செழிப்பாலும் அதிகாரத்தாலும் அச்சமுதாயம் சீரழிந்ததாகவும், அதனைத் தொடர்ந்து பெரும் நிலநடுக்கங்களாலும் எரிமலைச் சீற்றத்தாலும் அத்தீவு அழிந்ததாகவும் பிளேட்டோ கூறுகிறார்.
அட்லாண்டிஸ் குறித்த இத்தகவல்களை கிரேக்கச் சட்டங்களை உருவாக்கிய ஸோலான் என்பவரிடம் எகிப்திய ஞானிகள் கூறுவதாக பிளேட்டோ கூறுகிறார். இக்குறிப்புகள் பிளேட்டோவின் காலத்தில் வாழ்ந்த அரிஸ்டாட்டிலால்(கி.மு.384-322) கற்பனையானவை எனக் கூறப்பட்டாலும், பிளேட்டோவிற்கு பின்னர் இன்று வரையிலும் அட்லாண்டிஸைத் தேடுவோர் உள்ளனர்.

மேலும் பலர் இதனைப் பற்றி குறிப்பிட்டுள்ளனர். ஆரம்பத்தில் இந்நகரானது கிரேக்க தீவான சென்டோரினி, இத்தாலிய தீவுகளான சார்டினியா மற்றும் சைப்பிரஸில் இருக்கலாம் என பலரால் வெவ்வேறு விதமாக தெரிவிக்கப்பட்டு வந்தது.
தற்போது அந்நகரின் வாயில் இருந்ததாக கருதப்படும் பாரிய தூண் ஒன்றையும் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். மேலும் பல ஆதாரங்களையும் அவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

வேலை வாய்ப்புகளை அள்ளித் தரும் இணையதளம்


[ வெள்ளிக்கிழமை, 18 மார்ச் 2011, 03:56.50 மு.ப GMT ]
வேலை வாய்ப்புக்கான தேடல் இதைவிட சுலபமாக இருக்க முடியாது. ஜாப்சர்ச் இணையதளத்தை பார்த்தால் இப்படி தான் சொல்லத் தோன்றுகிறது.
அந்த அளவுக்கு இந்த தளம் வடிவமைப்பில் எளிமையாக பயன்படுத்துவதற்கு அதை விட எளிமையாக அமைந்துள்ளது என்றே கூறலாம். ஏற்கனவே உள்ள வேலைவாய்ப்பு தளங்களை விட இந்த தளத்தில் அப்படி என்ன விஷேசம் என்று கேடக் தோன்றலாம்.
முதலில் ஜாப்சர்ச் மற்றுமொரு வேலைவாய்ப்பு தளம் இல்லை. உண்மையில் இது வேலைவாய்ப்பு தளமே இல்லை. வேலை வாய்ப்புக்கான தேடியந்திரம். அதாவது மற்ற வேலைவாய்ப்பு தளங்களில் உள்ள வேலைவாய்ப்புகளை தேடுவதறகான தேடியந்திரம்.
வேலை வாய்ப்புக்கான் கூகுள் என்றும் சொல்லலாம். கூகுள் எப்படி இணையத்தில் உள்ள எண்ணற்ற தளங்களில் தேடி தேவையான தகவல்களை தருகிறதோ அதோ போல இந்த தளம் வேலை வாய்ப்பு தளங்களில் பட்டியலிடப்பட்டுள்ள வேலைகளில் இருந்து தேடி தருகிறது.
மேலும் மற்ற வேலை வாய்ப்பு தளங்களை போல இதில் தகவல்களை எல்லாம் சமர்பிக்க வேண்டியதில்லை. எந்த துறையில் வேலை தேவையோ அந்த துறையை கூறிப்பிட்டு தேடிப்பார்த்தால் வேலைகள் பட்டியலிடப்படுகினறன. கூகுளில் வரும் முடிவுகளை போலவே வரிசையாக வேலை வாய்ப்புகள் இடம்பெறுகின்றன.
அதன் பிறகு முடிவுகளை பல்வேறு வகைகளில் மாற்றியமைத்து பொருத்தமானதை தேர்வு செய்து கொள்ளலாம். உதாரணத்திற்கு சமீபத்தில் வெளியான வேலைவாய்ப்புகள், ஒரு வாரம் முன வெளியானவை என்றும் சுருக்கி கொள்ளலாம்.
வேலைக்கான பதவியின் தன்மை குறித்தும் தேடலை அமைத்து கொள்ளலாம். அதே போல எந்த நகரில் வேலை தேவை என்றும் குறிப்பிட்டு தேடலாம். வீட்டிலிருந்து எவ்வலவு அருகாமையில் இருக்க வேண்டும் என்று கூட் அகுறிப்பிடும் வசதி இருக்கிறது.
முழு நேரமா, பகுதி நேரமா என்றும் குறிப்பிட்டு தேடலாம். கல்வித்தகுதியின் அடிப்படையிலும் தேடலை பட்டியலை தீட்டிக்கொள்ளலாம். மேலும் மேம்பட்ட தேடல் வசதியை பயன்படுத்தி எந்த வகையான வேலை எந்த கம்பெனியில் எந்த அம்சங்களோடு வேண்டும் என்றும் தேட முடியும்.
எந்த வேலை தேவை என்பதில் குழப்பம் இருந்தால் இந்த தளத்தில் பிரபலாமாக உள்ள தேடல் பதங்களை கிளிக் செய்து இப்போது வேலை வாய்ப்பு சந்தையில் என்ன டிரென்ட் என்றும் புரிந்து கொள்ள முயற்சிக்கலாம்.
சரியான வேலை வாய்ப்புக்காக பல்வேறு தளங்களுக்கு சென்று அல்லாடாமல் ஒரே தளத்தில் அழகாக வேலை வாய்ப்பை தேடலாம் என்பதோடு உறுப்பினராக பதிவு செய்ய வேண்டிய அவசியமும் இல்லை.