Tuesday, November 30, 2010

பயன் தரும் தளங்கள்

இன்றைய நமது செய்தியாக உங்களுக்கு பயன் தரக்கூடிய தளங்கள் சில

1) அனைத்து முக்கிய மென்பொருள்களினதும் பழைய தொகுப்புக்களினை தரவிறக்கம் செய்து கொள்ளக்கூடிய ஓர் தளம்

இணையதள முகவரி : http://www.oldversion.com

2) இணையத்தில் நமது புகைப்படங்களை இலக்கங்களாக மாற்றும் ஓர் தளம்

இணையதள முகவரி : http://www.picascii.com

3) 3D-ல் படம் வரையக்கற்றுத்தரும் ஓர் தளம்

இணையதள முகவரி : http://www.3dtin.com

4) கார்களை பழுதுபார்க்கக் கற்றுத்தரும் ஓர் தளம்

இணையதள முகவரி http://www.vehiclefixer.com

5) இணையத்தில் யுனிட் கன்வர்டர் செய்யக்கூடிய ஓர் தளம்

இணையதள முகவரி : http://www.digitaldutch.com/unitconverter/

6) இணையத்தினூடாக பி.டி.எப் பைல்களை எக்செல் பைல்களாக மாற்ற உதவும் ஓர் தளம் (PDF to Excel)

இணையதள முகவரி : http://www.pdftoexcelonline.com

7) இணையத்தினூடாக உங்கள் புகைப்படத்தை முப்பரிமாணமாக (3D) மாற்ற ஓர் தளம்

இணையதளமுகவரி : http://3d-pack.com

8) உங்கள் ஓவியப்படைப்புகளை விற்பனை செய்ய ஓர் தளம்

இணையதள முகவரி : http://www.artflock.com

9) யுடியூப் வீடியோவினை எம்.பி.3 (MP 3 ) பாடலாக மாற்றுவதற்கான ஓர் தளம்

இணையதள முகவரி : http://www.listentoyoutube.com

10) கணனியின் அனைத்து மென்பொருட்களிற்குமான சோர்ட்கட்களை கற்றுத்தரும் ஓர் தளம்.

ஒளிரும் மரங்கள்: பயோலுமினசென்ஸ் ஆற்றல் மூலமான புரட்சி _

மின் சக்தியில்லாமல் தானாக ஒளிரக்கூடிய மரங்களை தாம் உருவாக்கிவருவதாக கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

எதிர்காலத்தில் இம்மரங்களை தெருவிளக்குகளுக்கு பதிலாக உபயோகப்படுத்தமுடியும்.

இதற்காக உடலில் இருந்து வெளிச்சத்தை வெளிப்படுத்தும் சிலவகையான பூச்சிகள் மற்றும் விலங்குகளின் மரபணுக்களில் சோதனை நடத்தப்பட்டுவருகின்றது.

பயோலுமினசென்ஸ் எனப்படுவது (Bioluminescence) உடலில் இருந்து வெளிச்சத்தை வெளிப்படுத்தும் ஆற்றலாகும்.

இவ்வாற்றலானது குறிப்பிட்ட சில ஜீவராசிகளுக்கே சாத்தியமாக உள்ளது.இவற்றின் மரபணுக்களும் இதற்கான ஒரு காரணமாகும்.

எனவே மின்மினிப்பூச்சிகள் மற்றும் சில மின்னும் கடல்வாழ் பக்டீரியாக்களின் மரபணுக்களைக் கொண்டும் ஆராய்ச்சி நடத்தப்பட்டுள்ளது.இவை வெற்றிகரமான முடிவுகளைத் தந்துள்ளன.

இவை மரங்களுக்கு மட்டுமன்றி ஒளிரும் பல்வேறு பல்வேறு பொருட்களுக்கும் பயன்படுத்த முடியுமெனவும் ஆராய்ச்சியாளர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.


பயோலுமினசென்ஸ் ஆற்றல் கொண்ட விலங்குகள் தொடர்பான காணொளிகள்.

வை-பை கதிர்கள் மனிதர்களை தாக்குகின்றதா?

வை-பை ( wi-fi) கதிர்களினால் தாவரங்களின் வளர்ச்சி பாதிக்கப்படுவதாகவும் , சிலவேளைகளில் இவை மனிதர்களிலும் பாதிப்பை ஏற்படுத்தலாம் எனவும் நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த வெகனிங்கன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.இந்த ஆய்வின்போது விஞ்ஞானிகள் வெவ்வேறு வகையான கதிர்களை 20 மரங்களுக்கு சுமார் 3 மாதங்கள் வரை வழங்கி ஆராய்ச்சி செய்துள்ளனர்.

இதன்போது வை-பை கதிர்களுக்குஅண்மையில் காணப்பட்ட மரங்களின் இலைகள் வேகமாக உதிர்ந்ததுடன், மரங்களில் கசிவுகளும் ஏற்பட்டதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

மேலும் இதனூடக வெளிப்படும் மின்காந்த அலைகள் சோளப்பயிர்களின் வளர்ச்சியினையும் பாதித்ததாகவும், சில வேளை இவை மனிதனையும் பாதிக்கும் சாத்தியம் அதிகம் எனவும் அவர்கள் கண்டுபிடித்துள்ளனர்..

இது தொடர்பான ஆய்வு தற்போது ஆரம்பகட்டத்திலேயே உள்ளதெனவும் இதனை சரியாக உறுதிப்படுத்த சில மாதங்கள் ஆகலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இக்கதிர்கள் மட்டுமன்றி வாகனங்களில் இருந்து வெளியாகும் புகை, கையடக்கத்தொலைபேசி கோபுரங்களில் இருந்து வெளியாகும் கதிர்கள் கூட தாவரங்களைப் பாதிக்கின்றமை நிரூபிக்கப்பட்ட உண்மையாகும்