Wednesday, November 10, 2010

இலங்கையில் 350 மீற்றர் உயரத்தில் மிகப்பெரிய கட்டடம்!

இலங்கையில் மிகப்பெரிய கட்டடத்தை நிர்மாணிக்கும் வேலைகளை சீன அரசு நிறுவனம் ஒன்று ஏற்றுக் கொண்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தாமரைக் கோபுரம் (Lotus Tower) என்ற பெயரில் 350 மீற்றர் உயரத்தைக் கொண்டதாக இந்தக் கட்டடம் அமைக்கப்படவுள்ளது.
தாமரை வடிவத்தில் இந்தக் கோபுரம் சுமார் 20 ஏக்கர் மைதா னத்தை உள்ளடக்கியதாகவும் அமைக் கப்படவுள்ளது.

200 மில்லியன் டொலர் செலவில் இந்தக் கோபுரத்தை அமைக்கும் பணிகளை சீன அரசு நிறுவனம் ஒன்றே பொறுப்பேற்றுள்ளது. இது சிறிலங்காவில் சீனா மேற்கொள்ளவுள்ள அடுத்த மிகப்பெரிய திட்டமாகும்.

இதன் முதலாவது மற்றும் இரண்டாவது தளங்கள் தொலைக்காட்சி, வானொலி போன்றவற்றின் ஒளி, ஒலிபரப்புக்கும், தொலைத்தொடர்பு சேவைகளுக்கும் பயன்படுத்தப்படவுள்ளன.

வணிக வளாகத்தையும் உள்ளடக்கியதாக அமையவுள்ள இந்தக் கோபுரத்தின் உச்சியில் சூதாட்ட மற்றும் இரவு விடுதிகள் என்பனவும் அமையவுள்ளன