Friday, March 18, 2011

ஜிப் பைல்களின் கடவுச்சொல்லை உடைக்க


[ சனிக்கிழமை, 12 மார்ச் 2011, 04:46.39 மு.ப GMT ]
அதிகமாக உள்ள கோப்புகளின் அளவை சுருக்க பயன்படுத்தப்படும் பார்மெட்டுகளில் ஜிப் பார்மெட்டும் ஒன்றாகும். இதற்கு நாம் கடவுச்சொல் கொடுத்து உருவாக்க முடியும்.
ஒரு சில நேரங்களில் இவ்வாறு உருவாக்கும் கோப்புகளின்  கடவுச்சொல்லை நாம் மறந்து விடுவோம். அப்போது அந்த குறிப்பிட்ட கோப்புகள் ஜிப்பைலாக மட்டுமே இருக்கும். ஒரு சில கணணி பயனாளர்கள் வைரஸ் தாக்காமல் இருப்பதற்காக டாக்குமெண்ட்களை ஜிப் பைலாக மட்டுமே வைத்திருப்போம்.
அதனுடைய ஒரிஜினல் கோப்புகள் யாவும் நம்மிடம் இருக்காது. அவை அனைத்தும் ஜிப் பைல்களாக மட்டுமே இருக்கும். அது போன்ற சூழ்நிலையில் அந்த கோப்புகளின் கடவுச்சொல்லை நீக்கினால் மட்டுமே ஒரிஜினல் கோப்புகளை நம்மால் பயன்படுத்த முடியும்.
இவ்வாறு ஜிப் பைல்களின் கடவுச்சொல்லை உடைக்க மென்பொருள் உள்ளது. இந்த மென்பொருளை இணையத்தில் இருந்து தரவிறக்கி கணணியில் நிறுவிக் கொள்ளவும்.
பின் இந்த அப்ளிகேஷனை ஓபன் செய்யவும். அதில் கடவுச்சொல் இட்டு பூட்டப்பட்ட ஜிப் பைலை தேர்வு செய்து கொள்ளவும். அடுத்து எங்கு சேமிக்க வேண்டுமோ அந்த இடத்தை தேர்வு செய்து கொள்ளவும்.
Characters என்ற பாக்சில் எந்த மாற்றமும் செய்ய வேண்டாம். MinLength, MaxLength என்பதில் இலக்கங்களை குறிப்பிட்டு கொள்ளவும். பின் Start பொத்தானை அழுத்தவும்.
நீங்கள் குறிப்பிட்ட இடத்தில் கோப்பானது கடவுச்சொல் நீக்கப்பட்டு சேமிக்கப்படும். ஆனால் கடவுச்சொல்லை நீக்க அதிக நேரம் ஆகும். உங்களுடைய கடவுச்சொலை பொருத்து நேரம் வேறுபடும்.

No comments:

Post a Comment