Friday, March 18, 2011

இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 6 ன் பயன்பாட்டை ஒழிப்பதற்கு மைக்ரோசாப்ட் கடும் முயற்சி


[ செவ்வாய்க்கிழமை, 08 மார்ச் 2011, 04:05.09 மு.ப GMT ]
15 ஆண்டுகள் பழமையான இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 6 ஐ ஒழித்துக்கட்டுவதற்கான பிரச்சாரங்களை மைக்ரோசாப்ட் தனது பாணியில் தொடங்கியுள்ளது.
இதற்கான ஒரு இணையத்தளத்தை ஆரம்பித்து அதில் உலகெங்கும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் உலாவி 6 ஐ பயன்படுத்துபவர்களின் வீதத்தை கணக்கிட்டு வருகிறது.
அதில் ஏனைய புதிய உலாவிகளை பயன்படுத்த தொடங்குமாறும் உங்கள் நண்பர்கள் யாராவது இன்னும் 15 ஆண்டுகள் பழமையான IE 6 உலாவியை பயன்படுத்தி வந்தால் அவர்களுக்கு அதை மேம்படுத்துவதற்கு சொல்லிக் கொடுங்கள் என்றும் வலியுறுத்தி வருகிறது.
2011 ஆம் ஆண்டில் நாம் இருக்கிறோம் புதிய இணைய மாற்றங்களுக்கு ஈடு செய்வதற்கு ஏற்ற வகையில் புதிய உலாவிகளை பயன்படுத்த தொடங்குவோம். 15 ஆண்டுகள் பழமையான IE 6 க்கு விடை கொடுக்கும் நேரம் இதுவாகும் என்று தெரிவிக்கிறது மைக்ரோசாப்ட்.
இணையத்தளத்தை வடிவமைக்கும் வெப்மாஸ்டர்கள் IE 6 க்கும் ஏற்ற வகையில் ஒரு தளத்தை வடிவமைப்பதற்கும் மணிக்கணக்காக தங்கள் பொன்னான நேரத்தை செலவழிக்கிறார்கள். அவர்களுக்கு உதவும் வகையிலும் இந்த செயற்பாட்டை தொடங்கியுள்ளது மைக்ரோசாப்ட்.
IE 6 ஐ இந்தியாவிலும், சீனாவிலும் அதிகமானோர் பயன்படுத்துகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. வலைப்பதிவுகள் மற்றும் இணையத்தளங்கள் நடத்துபவர்களாயின் உங்கள் தளங்களிலும் IE 6 ஐ தடுப்பதற்குரிய முயற்சிகளை மேற்கொள்ளுமாறும் கேட்டுள்ளது மைக்ரோசாப்ட்.

No comments:

Post a Comment