Monday, September 19, 2011

குரோம் உலாவியில் கூகுள் ப்ளஸ் ஐகானை இணைப்பதற்கு


குரோம் உலாவியில் கூகுள் ப்ளஸ் ஐகானை இணைப்பதற்கு
[ ஞாயிற்றுக்கிழமை, 18 செப்ரெம்பர் 2011, 07:46.37 மு.ப GMT ]
கூகுள் பிளஸ் வந்த வேகத்தில் அனைவரிடமும் நீங்காத இடம் பிடித்துவிட்டது என்று சொன்னால் அது மிகையில்லை.
எளிமையான முகப்பு தோற்றமும் அதிகமான சேவையும் தான் மக்களை இதன் பக்கம் திரும்பி பார்க்க வைத்திருக்கிறது. குரோம் உலாவியில் எளிதாக கூகுள் பிளஸ் பயன்படுத்துவதற்காக புதிதாக ஒரு நீட்சி வந்துள்ளது.
பேஸ்புக்கிற்கு இணையான ஒரு சோசியல் நெட்வொர்க் கூகுள் தரப்பில் இருந்து வெளிவந்து அனைவராலும் பயன்படுத்தும்படி வளர்ந்து இருக்கிறது. கூகுள் பிளஸ் சேவையை நாம் குரோம் உலாவியில் ஒரே சொடுக்கிலிருந்து பயன்படுத்தலாம். நமக்கு உதவுவதற்காக ஒரு நீட்சி உள்ளது.
குரோம் உலாவியில் இத்தளத்திற்கு சென்று Install என்ற பொத்தனை சொடுக்கி எளிதாக நிறுவலாம். கூகுள் பிளஸ்(Google Plus) நிறுவி முடித்ததும் கூகுள் பிளஸ் ஐகான் நமக்கு உலாவியின் முகப்பில் தெரியும்.
இதில் நம் கூகுள் பிளஸ் கணக்கை திறந்து வைத்துக்கொள்ள வேண்டியது தான், இனி கூகுள் பிளஸ் தளத்திற்கு சென்று அவ்வப்போது யாராவது செய்தி பகிர்ந்துள்ளனரா என்றெல்லாம் தேட வேண்டாம்.
ஒரே இடத்தில் இருந்து எத்தனை பேர் கூகுள் பிளஸ்-ல் செய்தி அளித்துள்ளனர் என்ற எண்ணிக்கையை பார்க்கலாம், மேலும் படிக்க வேண்டும் என்றால் கூகுள் பிளஸ் ஐகானை சொடுக்கி மேலும் தெரிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment