Friday, April 29, 2011

ஆண்ட்ராய்டு சிஸ்டத்தின் பயன்பாடு உயர்ந்தது: ஆய்வில் தகவல்


ஆண்ட்ராய்டு சிஸ்டத்தின் பயன்பாடு உயர்ந்தது: ஆய்வில் தகவல்
[ புதன்கிழமை, 23 மார்ச் 2011, 07:15.24 மு.ப GMT ]
உயர் ரக ஸ்மார்ட் போன் விற்பனையில் கூகுள் நிறுவனத்தின் ஆண்ட்ராய்ட் ஓப்பரேட்டிங் சிஸ்டம் பொருத்தப்பட்ட போன்கள் முதல் இடத்தைப் பிடித்துள்ளன.
இதுவரை கடந்த பத்து ஆண்டுகளாக நோக்கியா மட்டுமே இந்தப் பிரிவில் முதல் இடம் கொண்டிருந்தது. சென்ற டிசம்பருடன் முடிந்த காலாண்டில் ஆண்ட்ராய்ட் ஓப்பரேட்டிங் சிஸ்டம் அதனை முறியடித்துள்ளதாக இது குறித்து தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வரும் கேனலிஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
சென்ற காலாண்டில் 3 கோடியே 29 லட்சம் ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன்கள் விற்பனையாகியுள்ளன. இது சென்ற ஆண்டைக் காட்டிலும் ஏழு மடங்கு அதிகமாகும். இது கூகுள் நிறுவனத்திற்குக் கிடைத்த மாபெரும் வெற்றியாகும்.
வருங்காலங்களில் கணணியைக் காட்டிலும் ஸ்மார்ட் போன்களே இணைய இணைப்பிற்கும், பிற செயல்பாடுகளுக்கும் பயன்படுத்தப்பட இருப்பதால் கூகுள் தன் ஆண்ட்ராய்ட் ஓப்பரேட்டிங் சிஸ்டம் மூலம் இன்னும் ஒரு மாபெரும் வெற்றியைப் பெற உள்ளது. 

No comments:

Post a Comment