Friday, April 29, 2011

சுனாமி ஏற்பட்டால் ஓடி வரும் ரோபோ


சுனாமி ஏற்பட்டால் ஓடி வரும் ரோபோ
[ வெள்ளிக்கிழமை, 29 ஏப்ரல் 2011, 11:11.30 மு.ப GMT ]
மரவட்டை போன்றவற்றை புழு தொட்டால் திடீரென உடலை சுருட்டிக் கொள்ளும். எதிரி விலகிவிட்டார் என்று ஊர்ஜிதப்படுத்திக் கொண்ட பிறகு தான் உடலை பழைய நிலைக்கு கொண்டு வரும்.
இதனை அடிப்படையாக வைத்து "புழு ரோபோ" ஒன்றை உருவாக்கியுள்ளனர் அமெரிக்காவின் மசாசூசட்ஸ் மாநிலத்தில் உள்ள டப்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள்.
இதுபற்றி விஞ்ஞானிகள் கூறியதாவது: சுனாமி, நிலநடுக்கம், வெள்ளம் போன்றவற்றில் நேரடியாகவும் இடிபாடுகளிலும் ஏராளமானோர் சிக்குகின்றனர். சிக்கியவர்களுக்கு இடையூறு ஏற்படாதவாறு இடிபாடுகளை அகற்றுவது கடினமாக உள்ளது.
இத்தகைய சூழலை இந்த புழு ரோபோ எளிதாக சமாளிக்கும். சிறு துளை வழியாக உள்ளே நுழையும். பாதிக்கப்பட்டவர்களை தன் சிலிகான் ரப்பர் உடலுக்குள் பத்திரமாக வெளியே தூக்கி வரும்.
முதல்கட்டமாக 4 இஞ்ச் நீளமுள்ள புழு ரோபோவை உருவாக்கி வெற்றிகரமாக சோதனை நடத்தியுள்ளோம். இதற்கு "கோ க்யூ போட்" என்று பெயர் வைத்துள்ளோம். மீட்பு பணிகளில் ஈடுபடுகிற வகையிலான பெரிய அளவிலான ரோபோக்களை உருவாக்கும் பணி கடைசிகட்ட ஆய்வுக்கு பிறகு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment