Wednesday, August 25, 2010

உலகின் முதலாவது முப்பரிமாண கெமரா - அச்சிடுதல் முறை அறிமுகம்

உலகில் முதலாவது முப்பரிமாண கெமரா மற்றும் அச்சிடுதல் முறை இன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பியூஜி பிலிம்ஸின் புதிய முப்பரிமாண முயற்சியாக இது அமைந்துள்ளது.

இந்தக் கெமரா மூலம் எடுக்கப்படும் புகைப்படத்தை உடனடியாக அல்பம் வடிவில் பார்க்க முடியும். இதில் காணப்படும் நவீன தொழில்நுட்பத்துடனான லென்ஸ் மனித கண்களின் பார்வை தூரத்தை விட மேலானது.

இது லெண்டிக்யூலர் தொழில்நுட்பம் என அழைக்கப்படுகிறது. இவ்வகையான தொழில்நுட்பம் 1940 களில் பாவிக்கப்பட்டாலும் பின்னர் நவீனப்படுத்தப்பட்டு தற்பொழுது முப்பரிமாண முறையில் அறிமுகமாகிறது

No comments:

Post a Comment