Monday, August 23, 2010

ஸ்மார்ட் போன்கள் மூலம் மொழி தடைகளை உடைக்கலாம்!!!

ஸ்மார்ட் போன்களிலேயே இயங்கும் real-time மொழிபெயர்ப்பு தொழில்நுட்பத்தை உருவாகியிருக்கிறார்கள். இதைப் பற்றி தான் இந்த பதிவு.
தீவிரவாதத்திற்கு எதிரான போர் என்று அமெரிக்கா ஈராக்கையும், ஆப்கானிஸ்தானையும் பிடித்த பிறகு அந்நாடுகளில் அமெரிக்க படையினருக்கு மொழிப்பிரச்சனை பெரிதாக வளர்ந்தது. சோதனைகளின் போது சைகை மொழியிலேயே பேச வேண்டியிருந்தது. இது மிக பிரச்சனை மிகுந்ததாகவே இருந்தது.

இச்சிக்கலை தீர்ப்பதர்க்க்காகவே TRANSTAC தொழில்நுட்பத்தை உருவாக்கியதாக கூறுகிறது National Institute of Standars and Technology (NIST). TRANSTAC மொழிபெயர்ப்பாளர்களின் தேவையை நீக்குகிறது. ஆங்கிலத்தில் பேசுவதை speech recognition தொழில்நுட்பத்தின் மூலம் புரிந்து கொண்டு txt file ஆக சேமிக்கிறது. பின் இது தேவையான மொழிக்கு மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு பின் ஒலிக்கிறது. பின்னர் மீண்டும் இதுவே அக்குறிப்பிட்ட மொழியில் இதே போல் மொழிபெயர்க்கப்பட்டு ஆங்கிலத்தில் ஒலிக்கும். பேசும் சொற்றொடரின் நீளத்திற்கு ஏற்ப மொழிப்பெயர்ப்பு வேகம் 2 அல்லது 3 வினாடிகள் வரை எடுத்து கொள்கிறது.

இதற்கு தனிக்கருவி எதுவும் இல்லாமல் ஸ்மார்ட் போன்களிலேயே பயன்படுத்த முடியும் என்பது இதன் சிறப்பு.

No comments:

Post a Comment