Saturday, August 14, 2010

என்சிலூடஸ் துணை கோளில் தண்ணீர் ஆதாரம்

விண்வெளி ஆராய்ச்சிக்காக செலுத்தப்பட்ட காசினி விண்கலம், நூற்றுக்கணக்கான படங்களை பூமிக்கு அனுப்புகிறது. சூரிய குடும்பத்தில் உள்ள ‘என்சிலூடஸ் துணை கோளை, காசினி விண்கலம் சுமார் 6,17,000 மைல் தூரத்தில் பயணித்த போது, எடுத்த படத்தை டாக்டர். ப்ராங்க் போஸ்ட்பெர்க்விஞ்ஞானிகள் ஆராய்ந்தனர்.
இதில் என்சிலூடசில் உப்புநீர் பனிப்பாறைகள் இருப்பது தெரியவந்துள்ளது. மேலும் அங்கு ஏரிகள், நீர்தேக்கங்கள், மற்றும் கடல்கள் இருந்திருக்க கூடும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மீன் உள்ளிட்ட கடல்வாழ் உயிரினங்கள் வாழ்ந்ததற்கான சாத்தியக் கூறுகளும் இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்த ஆராய்ச்சி மேலும் தொடர்ந்து நடைபெறுகிறது. சூரிய மண்டலத்தில் உள்ள 3 துணை கோள்களில் என்சிலூடசும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment